ஜெரூ பில்லிமோரியா

ஜெரூ பில்லிமோரியா (Jeroo Billimoria பிறப்பு 20 ஜூலை 1965) ஓர் இந்திய சமூக தொழில்முனைவோர் மற்றும் பல சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிறுவனர் ஆவார். அவரது பணி பல புத்தகங்களில் இடம்பெற்றுள்ளது. [1] [2] [3] அஃப்லாடூன் (சர்வதேச குழந்தை சேமிப்பு), இந்திய குழந்தை உதவி எண் அறக்கட்டளை மற்றும் சர்வதேச குழந்தை உதவி ஆகியவை அவரது குறிப்பிடத்தகுந்த முயற்சிகளில் அடங்கும். அவரது சமீபத்திய முயற்சி சர்வதேச குழந்தை மற்றும் இளைஞர் நிதி (CYFI) ஆகும், இது ஜெரூவால் 2011 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

பில்லிமோரியா இந்தியாவின் மும்பையில் பிறந்தார். இவரது பெற்றோர் கணக்காளர் மற்றும் சமூக சேவகராக இருந்தனர் . சமூக சேவையில் உறுதியாக இருந்த குடும்பத்தில் வளர்ந்த அவளது தந்தையின் மரணம் இவர் தன்னை சமூக காரணங்களுக்காக அர்ப்பணிக்க காரணமாக அமைந்தது. [4] பில்லிமோரியா வர்த்தக இளங்கலை பிரிவினை மும்பை பல்கலைக்கழகத்தில் (முன்னர் பாம்பே பல்கலைக்கழகம்) 1986 ஆம் ஆண்டிலும் , முதுகலை சமூகப் பணியினை டாடா சமூக அறிவியல் நிறுவன கழகத்தில் 1988 ஆம் ஆண்டிலும், லாபம்சாரா நிர்வாகத்தினை நியூயார்க் நகரில் உள்ள தெ நியூ ஸ்கூல் பார் சோசியல் ரிசர்ச் என்பதில் 1992ஆம் ஆண்டிலும் கற்றார்.இவர் 1991 முதல் 1999 வரை, டாடா சமூக அறிவியல் நிறுவனத்தில் பேராசிரியராக இருந்தார். [5]

தொழில் தொகு

சமூக தொழில் முனைவோர் தொகு

1989 இல் பில்லிமோரியா டாட்டா சமூக அறிவியல் கழகத்திற்குச் சென்று ஒரு பயிற்றுவிப்பாளராக ஆனார். மும்பை முகாம்களில் இவரது பட்டதாரி மாணவர்கள் பலர் சமூக சேவகர்களாக இருந்தனர்.

மும்பையில் உள்ள குழந்தைகளைத் திறமையாகவும் விரைவாகவும் தொடர்புகொண்டு உதவக்கூடிய ஒரு அமைப்பின் தேவையை இவர் அறிந்ததால் பல குழந்தைகள் நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் பணியினை மேற்கொண்டார்.இதில் பலமுறை தோல்வி கண்ட பின்னர் தனது பணியினை கைவிட முடிவு செய்தார்.[6]

அதற்குப் பதிலாக 1991 ஆம் ஆண்டில், மெல்ஜோல் (ஒன்று சேருவோம்) என்ற அமைப்பை நிறுவி, சமூகப் பலன்களைக் கொண்ட திட்டங்களில், பல்வேறு பின்னணியிலிருந்து குழந்தைகளை அழைத்துச் சென்றார். இந்த அமைப்பு அவர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளில் கவனம் செலுத்துவதன் மூலம் குழந்தைகளின் குடியுரிமை திறன்களை வளர்க்க முயல்கிறது மற்றும் அவர்களின் சூழலுக்கு சாதகமாக பங்களிக்க வாய்ப்புகளை வழங்குகிறது. 'அனைவருக்கும் சம உரிமை, வாய்ப்புகள் மற்றும் மரியாதை' என்பது மெல்ஜோலின் தத்துவத்தின் அடிப்படையாகும். [7]

பில்லிமோரியா குழந்தைகளுக்கான அவசர தொலைபேசி சேவை வழங்குநர்களின் சர்வதேச வலையமைப்பான சர்வதேச குழந்தைகள் உதவி மையத்தினை நிறுவினார். இன்றுவரை இந்த வலையமைப்பு 133 நாடுகளில் 140 மில்லியன் அழைப்புகளுக்கு பதிலளித்துள்ளது. [3] குழந்தைகள் அனுபவித்த அவசரநிலைகள் பற்றிய தகவல்களைத் தொகுப்பதன் மூலம், இந்த அமைப்பானது, அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு போக்குகளை அடையாளம் கண்டு தகவல்களைத் தெரிவிக்கிறது, [3] ஒவ்வொரு சமூகத்தின் குறிப்பிட்ட கோரிக்கைகளுக்கு ஏற்றவாறு அவசர உதவிகளைச் செய்ய அனுமதிக்கிறது.

உதவி எண்கள் மையத்தின் மூலம் தரவைத் தொகுத்த பிறகு, பல அழைப்புகள் வறுமையினை மையமாகக் கொண்டிருந்ததனை அறிய முடிந்தது. இந்த கவலையை நிவர்த்தி செய்ய, பில்லிமோரியா அஃப்லாடவுன் என்ற ஒரு இலாப நோக்கற்ற நிறுவனத்தை உருவாக்கினார், இது குழந்தைகளுக்கு அவர்களின் பொருளாதார உரிமைகள் மற்றும் பொறுப்புகளை கற்பிப்பது மற்றும் அடிப்படை நிதி மேலாண்மை திறன்கள் மற்றும் பழக்கங்களை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தியது. இன்று இவருடைய அமைப்பு 101 நாடுகளில் 8 மில்லியன் குழந்தைகளைச் சென்றடைந்துள்ளது. [8]

சான்றுகள் தொகு

  1. "The Power of Unreasonable People," John Elkington and Pamela Hartigan, Harvard Business Press, 5 February 2008. Jeroo is profiled as a leading social entrepreneur.
  2. "How to Change the World," David Bornstein, Oxford University Press, 2004. Chapter on Jeroo’s life and work with Childline India.
  3. 3.0 3.1 3.2 "Rippling: How Social Entrepreneurs Spread Innovation Throughout the World," Beverly Schwartz, Jossey Bass, 2012.
  4. "Jeroo Billimoria | Ashoka | Everyone a Changemaker". Ashoka. Archived from the original on 11 November 2012. பார்க்கப்பட்ட நாள் 2017-10-18.
  5. "Jeroo Billimoria | Ashoka - India". india.ashoka.org (in ஆங்கிலம்). Archived from the original on 9 March 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-03-08.
  6. Bornstain, David (2007). How to Change the World. Oxford University Press, Inc.. 
  7. "Meljol Website". Archived from the original on 15 January 2013.
  8. "Results to Date". Archived from the original on 23 March 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-03-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெரூ_பில்லிமோரியா&oldid=3274638" இலிருந்து மீள்விக்கப்பட்டது