ஜெர்சி துணி

ஜெர்சி துணிகள் என்பவை ஒருவகைத் துணியாகும். இவை பெருந்தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளுக்கு அதிகம் பயன்படுகின்றது. தொடக்கத்தில் உரோமங்களால் இவை நெய்யப்பட்டன, பின்னர் பருத்திப் பஞ்சு, ரோமம், செயற்கை இழை ஆகியவற்றை கலந்து தயாரிக்கின்றனர். மத்திய காலங்களில் ஐரோப்பாவில் அமைந்துள்ள சேனல் தீவுகளில் அமைந்திருக்கும் ஜெர்சி என்ற இடத்தில் முதன்முதலாக தயாரிக்கப்பட்டதால், இந்த துணிகளுக்கு ஜெர்சி துணிகள் என பெயர் பெற்றது.[1] ஒற்றை ஊசியால் இந்த துணிகளை நெய்யலாம். அது மட்டுமல்ல, இந்த துணிகள் எடை குறைவாக தயாரிக்கப்படுகின்றன. எடைகுறைந்த துணிகள் தான் தீ-சட்டைகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.[2] உள்ளாடைகள், மேலாடைகள் போன்றவைகளுக்கும் ஜெர்சி துணிகளே அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

Interlock jersey fabric

குறிப்புகள்

தொகு
  1. Portrait of the Channel Islands, Lemprière, London, 1970, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7091-1541-5
  2. Cresswell, Lesley; Watkins, Susanna (2002). Textiles Technology Student Book. GCSE Design & Technology for Edexcel. Heinemann Educational Publishers. pp. 161. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-435-41786-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெர்சி_துணி&oldid=3581043" இலிருந்து மீள்விக்கப்பட்டது