செருமனி நாட்டுப்பண்

(ஜெர்மனி நாட்டுப்பண் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

செருமனி நாட்டுப்பண்  ("Deutschlandlied" (ஆங்கிலம்: "Song of Germany", டாய்ச்சு ஒலிப்பு: [ˈdɔʏtʃlantˌliːt];  "Das Lied der Deutschen" என்று அறியப்படும், பாடல் 1922 ஆண்டு முதல் செருமனி நாட்டின் நாட்டுப்பண்ணாக இருந்துவருகிறது. 1949ஆம் ஆண்டு செருமனி கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி என பிளவுபட்டபோது இந்த பாடல் நாட்டுப்பண் என்ற தகுதியை இழந்தது என்றாலும் பெர்லின் சுவர் இடிந்து 1990 இல் ஒன்றுபட்ட ஜெர்மனி மீண்டும் உருவானபோது மீண்டும் இப்பாடல் நாட்டுப்பண்ணாக தேர்வுசெய்யப்பட்டது.

இதற்கான இசையை 1797 இல் அமைத்தவர் ஆஸ்திரிய இசையமைப்பாளரான ஜோசப் ஹேடன் ஆவார். இப்பாடல் புனித உரோமைப் பேரரசின் ம்ன்னரான இரண்டாம் பிரான்சின் பிறந்த நாளன்று உருவாக்கினார். உரோமப் பேரசு கலைக்கப்பட்டபின் பிற்காலத்தில் ஆத்திரியப் பேரரசின் நாட்டுப்பண்ணாக விளங்கியது. 1841 ஆண்டு ஜெர்மன் மொழியியலாளரும், கவிஞருமான ஆகஸ்ட் ஹீன்ரிச் ஹாட்மேன் வோன் ஃபாலர்செபன் என்பவர் ஹேடனின் மெல்லிசைக்குப் பாடல்வரிகளை எழுதினார். அந்த காலகட்டத்தில் இந்தப் பாடல்வரிகள் புரட்சிகரமானதாகக் கருதப்பட்டது.

வரிகள்

தொகு
ஜெர்மானிய மொழியில் தமிழ் ஒலிபெயர்ப்பு தமிழ் மொழிபெயர்ப்பு[1]



Einigkeit und Recht und Freiheit
Für das deutsche Vaterland!
Danach lasst uns alle streben
Brüderlich mit Herz und Hand!
Einigkeit und Recht und Freiheit
Sind des Glückes Unterpfand;
 



ஐன்கிட் உண்ட் ரெச்ட் உண்ட் ஃப்ரீஹிட்

ஃபர் தஸ் டாய்ஸ்ச வாடர்லேண்ட்

டானச் லாஸ்ட் உன்ஸ் அல்லே ஸ்ட்ரபன்

ப்ரூடர் லிஸ்ச்மித் ஹெர்ஸ் உண்ட் ஹாண்ட்

ஈனிகிட் உண்ட் ரெச்ட் உண்ட் ஃப்ரீஹிட்

சிந்த் தஸ் க்லகஸ் உண்டர்ப்ஃபெண்ட்

ப்ளூஹிம் க்ளான்ஸ் டீஸஸ் க்ளூகஸ்

ப்லூஹே டாய்ஸ்சஸ் வாடர்லண்ட்.



ஒற்றுமை, நீதி மற்றும் சுதந்திரம்

தந்தையர் நாடு ஜெர்மனிக்கு.

இந்த நோக்கத்துகாக நாம் அனைவரும் பாடுபடுவோம்.

இதயத்தில் இருகரத்தில் சகோதர பாசம்

ஒற்றுமை நீதி மறு சுதந்திரம்

மகிழ்ச்சியின் உறுதிமொழிகள்.

இந்த மகிழ்ச்சியில் தழைக்கட்டும்.

தந்தையர் நாடு ஜெர்மனி தழைக்கட்டும்.

மேற்கோள்கள்

தொகு
  1. பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி (11 ஆகத்து 2016). "போட்டிப் பாட்டு!". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 12 ஆகத்து 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செருமனி_நாட்டுப்பண்&oldid=3577306" இலிருந்து மீள்விக்கப்பட்டது