ஜெ. மெர்சிகுட்டி அம்மா

இந்திய அரசியல்வாதி

ஜெ. மெர்சிகுட்டி அம்மா (J. Mercykutty Amma) (பிறப்பு: செப்டம்பர் 30, 1955) இவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் கேரளத் துறைமுப் பொறியியல், முந்திரி தொழில்; மீன்வள பல்கலைக்கழகம், மீன்வளத்துறை போன்ற துறைகளின் அமைச்சருமாவார்.[1] இவர் கேரளாவின் கொல்லத்தில் உள்ள குந்தரா தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவராவார்.

ஜெ. மெர்சிகுட்டி அம்மா
துறைமுகப் பொறியியல், முந்திரி தொழில், மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் கேரள மீன்வளத்துறை பல்கலைக்கழக இணை வேந்தர்
பதவியில் உள்ளார்
பதவியில்
25 மே 2016
தொகுதிகுண்டாரா சட்டமன்றத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2016
முன்னையவர்எம். ஏ. பேபி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30 செப்டம்பர் 1955 (1955-09-30) (அகவை 69)
கொல்லம், கேரளம், இந்தியா
தேசியம்இந்தியாn
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
துணைவர்பி. துளசீதர குரூப்
பிள்ளைகள்2
பெற்றோர்
  • பிரான்சிஸ்
  • ஜைனம்மா

சுயசரிதை

தொகு

ஜே. மெர்சிகுட்டி அம்மா, ஜெயின்மா மற்றும் பிரான்சிஸ் ஆகியோருக்கு 1955 செப்டம்பர் 30 அன்று பிறந்தார். இவர், மலையாளத்தில் முதுகலைப் பட்டதாரி ஆவார். சட்டத்துறையில் இளங்கலைப் படிப்பை முடித்துள்ளார். கொல்லம் இந்திய தொழிற்சங்கங்களின் மையத்தின் தலைவர் பி. துளசீதரா குருப் என்பவரை திருமணம் செய்து கொண்டார்

மாணவ ஆர்வலராகத் தொடங்கி இடதுசாரி அரசியலில் ஒரு நீண்ட பயணத்திற்குப் பிறகு மெர்சிகுட்டி அம்மா தனது இடத்தைப் பிடித்தார். 1974 ஆம் ஆண்டில் இந்திய மாணவர் சங்கத்தின் செயல்பாட்டாளராக அரசியலில் நுழைந்தார். கொல்லத்தின் பாத்திமா மாதா தேசிய கல்லூரி மற்றும் கொல்லம் சிறீ நாராயண கல்லூரி ஆகியவற்றில் இந்திய மாணவர் சங்கத்தின் அலுவலக பொறுப்பாளராக இருந்தார். இவர் 1985 வரை இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவராகவும் அகில இந்திய துணைத் தலைவராகவும் பணியாற்றினார். [2]

இந்தியத் தொழிற்சங்க மையம் மற்றும் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகியவற்றில் பல்வேறு பதவிகளை வகித்தார். திருமதி. மெர்சிகுட்டி அம்மா 2012 வரை கொல்லத்தின் மத்ஸ்யாதோஜிலாலி (மீனவர்) கூட்டமைப்பின் மாவட்டக் குழுத் தலைவராகவும் 1987 முதல் 2005 வரை மாநில துணைத் தலைவராகவும் இருந்தார். [2] கொல்லம் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளராகவும், 1989 வரை கொல்லம் மற்றும் காதி தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவராகவும் இருந்தார். இவர் மீன்வள மேம்பாட்டு நிறுவனத்தின் கேரள மாநில கூட்டுறவு கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்தார்.

இப்போது இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் மாநிலக்குழு உறுப்பினரும் மற்றும் அகில இந்திய துணைத் தலைவருமாவார். இந்திய தொழிறசங்க மையத்தின் மாநிலச் செயலாளர் மற்றும் கேரள முந்திரி தொழிலாளர் மையத்தின் துணைத் தலைவரும் ஆவார். [2]

இவர் முதன்முதலில் கேரள சட்டமன்றத்திற்கு 1987 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார் (26 மார்ச் 1987 - 17 ஜூன் 1991). இவர் மீண்டும் 1996 இல் கேரள சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் (20 மே 1996 - 13 மே 2001). மெர்சிகுட்டி அம்மா 2016 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக கேரள சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் இந்த முறை மீன்வளம், துறைமுக பொறியியல் மற்றும் முந்திரி தொழில் துறைகளின் அமைச்சரானார். [3]

குறிப்புகள்

தொகு
  1. "J. Mercykutty Amma - Government of Kerala, India".[தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 2.2 "Members - Kerala Legislature". www.niyamasabha.org. பார்க்கப்பட்ட நாள் 2020-05-12.
  3. https://english.mathrubhumi.com/news/kerala/law-will-be-framed-to-ensure-quality-of-fish-minister-mercykutty-amma-1.4690717
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெ._மெர்சிகுட்டி_அம்மா&oldid=3776006" இலிருந்து மீள்விக்கப்பட்டது