ஜேம்சு ஆர்கிரீவ்ஸ்

ஜேம்சு ஆர்கிரீவ்சு (James Hargreaves:1720 – 1778[2]). இங்கிலாந்தைச் சேர்ந்த நெசவாளர்; தச்சர் மற்றும் கண்டுபிடிப்பாளர். 1764 இல் நூற்கும் ஜென்னி என்ற இயந்திரத்தைக் கண்டறிந்தவர்.[3] எழுதவும் படிக்கவும் தெரியாத ஆர்கிரீவ்சு கண்டறிந்த இவ்வியந்திரம் தொழிற்புரட்சியின் பொழுது நெசவுத் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.[4] இதே நேரத்தில் தாமசு ஹை என்பவரும் நூற்கும் ஜென்னியைக் கண்டறிந்தார்.[5] ஆனால் ஆர்கிரீவ்சு சுழலும் அச்சில் இயங்கும் விதமாக இக்கருவியை மேம்படுத்தினார்.[6] ஆர்கிரீவ்சு இதற்கான காப்புரிமையைப் பெறாமலேயே இக்கருவியினை விற்பனை செய்தார். பிற நெசவாளர்களின் பொறாமை காரணமாக இவரின் வீடு மற்றும் நூற்கும் ஜென்னி இயந்திரங்கள் அடித்து நொறுக்கப்பட்டது.[4] இதனால் ஆர்கிரீவ்சு நாட்டிங்காம் சென்று குடியேறினார்.

ஜேம்சு ஆர்கிரீவ்சு
பிறப்புcir 1720
Knuzden Brook, Oswaldtwistle, Lancashire, England
இறப்பு1778 (அகவை 57–58)
தேசியம்பிரித்தானியர்
அறியப்படுவதுநூற்கும் ஜென்னி
வாழ்க்கைத்
துணை
Elizabeth Grimshaw (தி. 1740)
[1]
பிள்ளைகள்13[1]

ஜேம்சு ஆர்கிரீவ்சின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிறர் இவ்வியந்திரங்களை உற்பத்தி செய்தனர். ஆனால் அதற்கான தொகை இவருக்கு வழங்கப்படவில்லை. ஏழ்மையான நிலையில் வாழ்ந்த ஆர்கிரீவ்சு 1778 இல் மறைந்த போது 20,000 நூற்கும் ஜென்னிகள் பிரித்தானியாவெங்கும் புழக்கத்தில் இருந்தன.[6]

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு
  1. 1.0 1.1 "James Hargreaves Family". Geocities.ws. பார்க்கப்பட்ட நாள் 2012-05-29.
  2. "James Hargreaves, or James Hargraves (English inventor)- Britannica Online Encyclopedia". Britannica.com. பார்க்கப்பட்ட நாள் 2012-05-29.
  3. "Spinning Jenny". பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 25, 2012.
  4. 4.0 4.1 "James Hargreaves". பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 25, 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "James Hargreaves and the Spinning Jenny". pp. -page 1. Archived from the original on 2004-08-12. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 25, 2012.
  6. 6.0 6.1 "Spartacus Educational". பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 25, 2012.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்சு_ஆர்கிரீவ்ஸ்&oldid=3573373" இலிருந்து மீள்விக்கப்பட்டது