ஜே. என். என். மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி
தமிழ்நாட்டின், திருவள்ளூரில் அமைந்துள்ள மேல்நிலைப் பள்ளி
ஜே. என். என். மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி (J.N.N Matriculation & Higher Secondary School) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருவள்ளூரில் அமைந்துள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியாகும். இப்பள்ளிக்கு தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகளின் இயக்குநரகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பள்ளி 2008 இல் நிறுவப்பட்டது. இது அலமேலு அம்மாள் கல்வி அறக்கட்டளையால் துவக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.
வகை | தனியார் |
---|---|
உருவாக்கம் | 2009 |
தலைவர் | எஸ். ஜெயசந்திரன் |
முதல்வர் | எஸ். ஏமலதா |
கல்வி பணியாளர் | 55 |
நிருவாகப் பணியாளர் | 16 |
மாணவர்கள் | 820 |
அமைவிடம் | , , 13°15′45″N 80°6′23″E / 13.26250°N 80.10639°E |
வளாகம் | நகர்ப்புறம் |
இந்த அறக்கட்டளையானது ஜே. என். என் பொறியியல் கல்லூரி, ஜே. என். என் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, ஜே. என். என் வித்யல்லயா, ஜே. என். என் கல்வியியல் கல்லூரி ஆகியவற்றை நிர்வகிக்கிறது .