ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி

(ஜே. கிருஷ்ணமூர்த்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, (தெலுங்கு: జిడ్డు కృష్ణ మూర్తి) அல்லது ஜே. கிருஷ்ணமூர்த்தி (மே 11, 1895பெப்ரவரி 17, 1986), இந்திய (தத்துவ) மெய்யறிவாளர்களுள் முக்கியமானவர். உலகளவிலும் முக்கியமான தத்துவ ஆசிரியர்களுள் ஒருவராக மதிக்கப்படுபவர். பல நாடுகளிலுள்ள மக்களைச் சந்தித்து சொற்பொழிவுகளையும் கலந்துரையாடல்களையும் நிகழ்த்தினார்;

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி
1920களில் கிருஷ்ணமூர்த்தி
பிறப்புமே 11, 1895
மதனப்பள்ளி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்புபெப்ரவரி 17, 1986(1986-02-17) (அகவை 90)
கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணிபேச்சாளர், எழுத்தாளர், தத்துவ அறிஞர்
பெற்றோர்நாராயணைய்யாம் சஞீவம்மா ஜிட்டு

சுருக்கமாக ஜே.கே என்றழைக்கப்பட்ட இவர், இவரது இளம் வயதிலேயே அப்போதைய் தியோசபிகல் சொசைட்டியின் அன்னிபெசன்ட் அம்மையால் தத்தெடுக்கப்பட்டு, எதிர்கால தியொசபில் தலைவராக அறிவிக்கப்பட்டிருந்தார். எனினும்,எந்த ஒரு கொள்கை மூலமும்  உண்மையை உணர இயலாது. உண்மை, பாதைகள் அற்ற பிரதேசம் போன்றது என்பதை உணர்ந்த  ஜேகே அவர்கள் , தியோசபிகல் சொசைட்டி விட்டு விலகினார்..[1]

அன்றாட வாழ்வில் அவனுக்குத் தோன்றும் எண்ணங்களையும் உணர்வுகளையும் விழிப்புணர்வுடன் கவனிப்பதன் மூலம் மனிதன் தனக்குள் மாற்றம் கொண்டுவர இயலும் என்று கூறி வந்தார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. http://www.jkrishnamurti.org/about-krishnamurti/biography.php
  2. "kfionline". Archived from the original on 2009-03-05. பார்க்கப்பட்ட நாள் 2009-11-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிட்டு_கிருஷ்ணமூர்த்தி&oldid=3868169" இலிருந்து மீள்விக்கப்பட்டது