ஜே. கே. கே. முனிராஜா தொழில்நுட்பக் கல்லூரி

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரி

ஜே. கே. கே முனிராஜா தொழில்நுட்பக் கல்லூரி (J.K.K. Munirajah College of Technology) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரி ஆகும். [1] [2] இந்த கல்லூரி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணா பல்கலைக்கழகம் கோயம்புத்தூர் பிரிவுடன் இணைவுபெற்றுள்ளது. [3] [4] இந்த கல்லூரி 2008-2009 கல்வியாண்டில் நிறுவப்பட்டு, அன்னை ஜே. கே. கே. சம்பூரானி அம்மாள் அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது. இக்கல்லூரி வளாகமானது 250 ஏக்கர்கள் (100 ha) பரப்பளவில் அமைந்துள்ளது.

ஜே. கே. கே முனிராஜா தொழில்நுட்பக் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்2008
அமைவிடம், ,
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்
இணையதளம்http://www.jkkmct.org/

வழங்கப்படும் பாடங்கள்

தொகு

இக்கல்லூரியில் மூன்று இளநிலை பொறியியல் (பி.இ) பாடங்களையும், ஒரு பாடத்தை இளநிலை தொழில்நுட்ப (பி.டெக்.) பாடத்தையும் வழங்குகிறது.

சேர்க்கை நடைமுறை

தொகு

மாணவர்களின் 12 ஆம் வகுப்பு (உயர்நிலை பள்ளி) மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படுகிறது. சேர்க்கையானது தமிழக அரசின் விதிமுறைகளின்படியும், மாநில அரசின் ஆலோசனை மற்றும் நடைமுறைகள் மூலம் செய்யப்படுகிறது.

குறிப்புகள்

தொகு
  1. "Dr Jkk Munirajah Educational Institutions, Namakkal phone number, email address, reviews and official website". Indiastudychannel.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-13.
  2. "J.K.K Muniraja College Of Technology, Gobi, Erode". Myengg.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-13.
  3. http://tnea09.annauniv.edu:9080/coldetail/colleges/747.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "J.K.K. Munirajah College of Technology - Admission, Courses, Fee, Contact Address | JKKM | Namakkal | Tamil Nadu". Minglebox. Archived from the original on 2014-08-13. பார்க்கப்பட்ட நாள் 2014-08-13.