ஜே. ஹேமச்சந்திரன்
ஜே. ஹேமச்சந்திரன் (J. Hemachandran; நவம்பர் 10, 1932 - பிப்ரவரி 8, 2008) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தொழிற்சங்கவாதி ஆவார். தமிழ்நாட்டில் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிசம்) முன்னணி ஆளுமையாக இருந்தார். 1980, 1984, 1989 மற்றும் 2001இல் திருவட்டாறு தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] அவர் சட்டமன்றத்தில் சிபிஐ (எம்) குழுவின் தலைவராக பணியாற்றினார்.[2]
பின்னணி
தொகுதிருவனந்தபுரத்தில் தனது கல்லூரிக் காலத்தில், ஜே. ஹேமச்சந்திரன் மாணவர் அரசியலில் தீவிரமாக இருந்தார். 1952இல் இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1962ஆம் ஆண்டில் நாகர்கோவிலில் கட்சியின் முழுநேர ஆர்வலர் ஆனார். தோட்டத் தொழிலாளர்களுடன் இணைந்து பணியாற்றினார். 1964இல் கட்சி பிரிந்தபோது, இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியை நன்கு வழிநடத்தினார். அதே ஆண்டில் இவர் DIR இன் கீழ் கைது செய்யப்பட்டு, பதினான்கு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.[3]
இந்திய தொழிற்சங்கங்களின் மையம் அமைக்கப்பட்டபோது, இவர் மாநிலத்தில் ஒரு முன்னணி நபராக ஆனார். இவர் தேயிலை, துணி, தோட்டத் தொழிலாளர்கள், மற்றவர்களுடன் போராட்டங்களை வழிநடத்தினார். 1990களில் இவர் சிஐடியுவின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய ரப்பர் வாரியத்தின் உறுப்பினராகவும், மாவட்ட செயலாளராகவும், அனைத்து இந்திய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார்.
போராட்டம்
தொகுதமிழ்நாட்டில் கொக்கக் கோலா, பெப்சி விற்பனை மீதான தடைக்காக போராடினார். மேலும் 2004ஆம் ஆண்டு சுனாமிக்குப் பிறகு, இவர் மாநிலத்தில் ஒருங்கிணைந்த நிவாரண பணிக்காக பிரச்சாரம் செய்தார்.[4][5]
இறப்பு
தொகு8 பிப்ரவரி 2008 அன்று திருவனந்தபுரம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு (முதுகில் ஒரு தண்டுவட கட்டி அகற்றப்பட்டது) இறந்தார்.
மேற்காேள்கள்
தொகு- ↑ "The Hindu, 10 February 2008". Archived from the original on 4 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 7 ஜூலை 2017.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "The Hindu, 19 May 2001". Archived from the original on 4 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 7 ஜூலை 2017.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "People's Democracy, 17 February 2008". Archived from the original on 8 August 2012. பார்க்கப்பட்ட நாள் 7 July 2017.
- ↑ Action Against Coca-Cola, Pepsi Sought in Tamil Nadu
- ↑ "Prakash Karat Visits Nagapattinam & Other Affected Areas". Archived from the original on 2009-11-05. பார்க்கப்பட்ட நாள் 2017-07-07.