ஜொகான்னெஸ் பிராம்ஸ்

ஜொகான்னெஸ் பிராம்ஸ் (Johannes Brahms - மே 7, 1833 – ஏப்ரல் 3, 1897) புனைவியக் காலத்தைச் சேர்ந்த ஒரு ஜேர்மானிய இசையமைப்பாளர். ஹாம்பர்க்கில் பிறந்த இவர் பிற்காலத்தில் ஆஸ்திரியாவிலுள்ள வியன்னாவில் குடியேறி வாழ்ந்தார். ஜோகான் செபாஸ்தியன் பாக்ஸ், லுட்விக் வான் பீத்தோவன் ஆகியோருடன் சேர்த்து பிராம்சும் எக்காலத்திலும் மிகச் சிறந்த, செல்வாக்குள்ள இசையமைப்பாளராகக் கணிக்கப்படுகிறார்.

ஜொகான்னெஸ் பிராம்ஸ்
Johannes Brahms Edit on Wikidata
பிறப்பு7 மே 1833
ஆம்பர்கு
இறப்பு3 ஏப்பிரல் 1897 (அகவை 63)
வியன்னா
படிப்புDoctor of Music
பணிஇசையமைப்பாளர், இசை நடத்துநர், pianist
வேலை வழங்குபவர்
  • Gesellschaft der Musikfreunde
  • University of Music and Performing Arts Vienna
  • Wiener Singakademie
சிறப்புப் பணிகள்A German Requiem, Symphony No. 1, Symphony No. 4
See list of compositions by Johannes Brahms
விருதுகள்Pour le Mérite for Sciences and Arts order, Bavarian Maximilian Order for Science and Art, Royal Philharmonic Society Gold Medal, honorary doctor of the University of Wrocław, honorary doctorate from the University of Cambridge, honorary citizen of Hamburg, Order of Leopold
இணையம்https://www.brahms-institut.de/index.php/de/allgemeines
கையெழுத்து

வாழ்க்கை தொகு

ஜொகான்னெஸ் பிராம்சின் தந்தை சிலெஸ்விக்-ஹோல்ஸ்ட்டீன் என்னும் இடத்திலிருந்து நகர இசைக் கலைஞராக வேலை தேடி ஹாம்பர்க்குக்கு வந்தார். அங்கே தன்னிலும் 17 வயது மூத்தவரான ஜொகான்னா ஹென்றிக்கா கிறிஸ்டியேன் நிசென் என்னும் பெண்ணை மணம் செய்து கொண்டார். இவர்களுக்குப் பிறந்தவரே ஜொகான்னெஸ் பிராம்ஸ்.

ஜொகான்னெஸ் பிராம்ஸ் தனது முதல் இசைப்பயிற்சியைத் தனது தந்தையிடமிருந்தே பெற்றுக்கொண்டார். தனது ஏழு வயது முதலே பியானோ இசைக்கருவியையும் இவர் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். மிக இளம் வயதிலேயே ஜொகான்னெஸ் பிராம்ஸ் மதுச் சாலைகளில் பியானோ இசைப்பதற்குக் கட்டாயப் படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. அண்மையில் பிராம்சின் வாழ்க்கை பற்றி ஆய்வுசெய்த கர்ட் ஹொஃப்மன் என்பவர் இக் கதை பொய்யானது என்கிறார். எனினும் இக்கதை பற்றிப் பிராம்சே குறித்திருப்பதால் ஹொஃப்மனுடைய கருத்து சரியானது எனப் பலர் ஏற்றுக்கொள்வதில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜொகான்னெஸ்_பிராம்ஸ்&oldid=2733753" இலிருந்து மீள்விக்கப்பட்டது