ஜோகினப்பள்ளி சந்தோஷ் குமார்
சந்தோஷ் குமார் (Santhosh Kumar) (பிறப்பு: 7 டிசம்பர் 1976) பாரத் இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும் மற்றும் தற்போது இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் தெலங்காணாவை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இவர் 23 மார்ச் 2018 தேர்தலில் வெற்றி பெற்றார். இந்தியாவின் தெலங்காணாவில் உள்ள நமஸ்தே தெலுங்கானா என்ற தெலுங்கு ஊடக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். தற்போது பாரத் இராட்டிர சமிதி கட்சியில் பொதுச் செயலாளராக உள்ளார். [1]
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுதெலங்காணா மாநிலம் கரீம்நகரில் உள்ள போயின்பல்லி மண்டலத்தில் உள்ள கொடுருபாகா கிராமத்தில் ரவீந்தர் ராவ் மற்றும் சசிகலா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர் தனது சொந்த கிராமத்தில் பத்தாம் வகுப்பு முடித்த பிறகு இடைநிலை மற்றும் பட்டப்படிப்புக்காக ஐதராபாத்து சென்றார். பின்னர், புனே பல்கலைக்கழகத்தில் மனித வள மேலாண்மை , முதுகலை வணிக மேலாண்மை ஆகியவற்றை முடித்தார். இவர் தெலங்காணாவின் முன்னாள் முதல்வர் க. சந்திரசேகர் ராவின் உடன்பிறந்த சகோதரரின் மருமகன் ஆவார். [2]