ஜோசப்பீன் ஜோசப்

ஜோசப்பீன் ஜோசப் (பிறப்பு: மார்ச்சு 19 1934), இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் புதுச்சேரியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்று பின்னர் சிங்கப்பூரில் செயிண்ட் ஜார்ஜ்ஸ் தமிழ் பள்ளியில் உயர்நிலைக் கல்வியை முடித்தார். இவர் ஓர் ஓய்வுபெற்ற ஆசிரியராவார். சிங்கப்பூர் தொலைக்காட்சியில் இரண்டாண்டுகள் சிறுவர் நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கியுள்ள இவர் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக உறுப்பினருமாவார்.

இலக்கியப் பணி தொகு

1952ல் எழுத்துலகில் பிரவேசித்த இவர் சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். ‘யார் குற்றம்?' எனும் இவரது முதல் சிறுகதை தமிழ் முரசில் வெளியானது. இவரது அநேகமான படைப்புகள் தமிழ் முரசு, தமிழ் மலர், இந்தியன் மூவி நியூஸ், தர்சணி போன்ற இதழ்களில் பிரசுரமாகியுள்ளன.

பெற்ற விருதுகளும், கௌரவங்களும் தொகு

சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்சும் தேசிய கலை மன்றமும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் 3ம் பரிசு தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் நடத்திய சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு

உசாத்துணை தொகு

  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோசப்பீன்_ஜோசப்&oldid=2713108" இலிருந்து மீள்விக்கப்பட்டது