ஜோசப் லெலிவெல்ட்

ஜோசப் லெலிவெல்ட் (Joseph Lelyveld, 5 ஏப்ரல் 1937 – 5 சனவரி 2024) என்பவர் நியூயார்க்கில் வாழ்ந்த வரும் ஒரு பத்திரிக்கையாளர் ஆவார். சில நூல்களையும் எழுதியுள்ளார். இலண்டன், புதுதில்லி, ஹாங்காங், ஜோகன்னர்ஸ்பர்க் ஆகிய நகரங்களில் பத்திரிக்கை நிருபராகப் பணியாற்றினார். மகாத்மா காந்தி பற்றியும் அவருடைய வாழ்க்கைப் பற்றியும் ஒரு நூலை எழுதினார். அந்நூலில் சில பகுதிகள் காந்தியின் பாலியல் வாழ்க்கைப் பற்றிய செய்திகள் இடம்பெற்ற காரணத்தால் அந்த நூல் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானது. எனவே 2011இல் குஜராத் மாநிலத்தில் அந்நூல் தடை செய்யப்பட்டது.

கல்வியும் பணியும் தொகு

  • ஜோசப் லெலிவெல்ட் 1958 ஆம் ஆண்டில் ஆர்வர்டு கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார்.
  • 1960 ஆம் ஆண்டில் கொலம்பியா இதழிகைப் பள்ளியில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.
  • 1962 இல் தொடங்கிக் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் டைம்சு இதழில் பணி ஆற்றினார்.
  • 1994 முதல் 2001 வரை நியூயார்க் டைம்ஸ் இதழில் செயல் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார்.
  • கதைகள் அல்லாத படைப்புகளுக்காகப் புலிட்சர் பரிசு 1986 இல் இவருக்கு வழங்கப்பட்டது.

எழுதிய நூல்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோசப்_லெலிவெல்ட்&oldid=3876134" இலிருந்து மீள்விக்கப்பட்டது