ஜோசெலின் ஜில்
ஜோசெலின் ஜில் (Jocelyn Gill) (1916–ஏப்பிரல் 26, 1984[1]) ஒரு அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் நாசாவில் பணிபுரிந்தார்.
ஜோசெலின் ஜில் Jocelyn Gill | |
---|---|
பிறப்பு | 1916 அரிசோனா |
இறப்பு | ஏப்பிரல் 26, 1984 சிஞ்சினாட்டி, ஓகியோ |
தேசியம் | அமெரிக்கர் |
பணியிடங்கள் | நாசா |
வாழ்க்கை
தொகுஇவர் மவுண்ட் கோலியோக் கல்லூரியில் ஆய்வக உதவியாளராகவும் வானியல் பயிற்றுநராகவும் பணிபுரிந்தார். பின்னர் இவர் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டார். இவர் தன் முனைவர் பட்டத்தை 1959 இல் யேல் பலகலைக்கழகத்தில் பெற்ரார்.[2][3][4] இவர் 1961 இல் நாசாவில் சேர்ந்தார். இங்கே இவர் ஆளுடைய விண்வெளித் திட்டத்தில் ஆய்வுகள் மேற்கொண்டு 1963 முதல் 1966 வரை விண்வெளி பறத்தல் அறிவியலில் தலைமைப் பொறுப்பை வகித்தார். மேலும் இவர் ஜெமினி விண்வெளித் திட்ட்த்திலும் பணிபுரிந்துள்ளார்.[3] இவர்1963 இல் சூரிய ஒளிமறைப்பு வெண்வெளி பயணத்தில் கலந்துகொண்டு, சூரிய ஒளிமுகட்டை ஆய்ந்த்தோடு விண்வெளி வீரர்களுக்கு வானியல் பாடமும் பயிற்றுவித்துள்ளார். வழக்கமாக இவர்களுக்கு வானியல் அறிவு தேவைப்படுவதில்லை.[2]
இவர் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தின் ஆய்வுறுப்பினர் ஆவார். இவர் 166 இல் கூட்டமைப்பின் பெண் விருதைப் பெற்ரார்.[3] இவருக்கு பன்மை இதய நார்த்துடிப்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இவர் 1966 இல் தேசிய பன்மை இதய நார்த்துடிப்பு நோய்க் கழகத்தின் அந்த ஆண்டின் சிறந்த பெண்மணியாகத் தேர்வு செய்யப்பட்டு அக்கழக விருதையும் பெற்றுள்ளார்.[5] இவர் அந்நோயால் 1984 இல் தன் 67 ஆம் அகவையில் இறந்தார்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ https://familysearch.org/ark:/61903/1:1:VKGH-CSN
- ↑ 2.0 2.1 Vern Haughland (July 1, 1963). "Jocelyn Gill -- She's Set Her Sights On The Stars". St. Petersburg Times: p. 40. https://news.google.com/newspapers?id=T5pPAAAAIBAJ&sjid=MlIDAAAAIBAJ&pg=6915%2C427480. பார்த்த நாள்: 29 March 2014.
- ↑ 3.0 3.1 3.2 Marilyn Ogilvie, Joy Harvey (2000). Biographical Dictionary of Women in Science. Routledge. p. 1019. பார்க்கப்பட்ட நாள் 29 March 2014.
- ↑ Tiffany K. Wayne (2011). American Women of Science Since 1900. Vol. 1. ABC-CLIO. p. 433. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1598841580. பார்க்கப்பட்ட நாள் 29 March 2014.
- ↑ "Woman Space Scientist Honored". The Kansas City Times: p. 12. 16 June 1966. https://www.newspapers.com/clip/822631/the_kansas_city_times/. பார்த்த நாள்: 5 August 2014.
- ↑ "Death of Dr. Jocelyn Gill, Nasa Chief". CWSP Gazette: A Newsletter of the Committee on the Status of Women in Physics of the American Physical Society 4 (4). November–December 1984. http://www.aps.org/programs/women/reports/gazette/upload/fall84.pdf. பார்த்த நாள்: 29 March 2014.