ஜோதி ஹெக்டே

ஜோதி ஹெக்டே (Jyoti Hegde ) ஓர் ருத்ரவீணை மற்றும் கந்தர்பாணி கரானாவைச் சேர்ந்த சித்தார் கலைஞர் ஆவார். இவர் தனது 12 வயதிலிருந்தே இசையைத் தொடர்ந்தார். தார்வாடு கர்நாடக பல்கலைக்கழகத்தில் இசையில் முதுகலைப் பட்டம் பெற்றார். விதுஷி ஜோதி ஹெக்டே ருத்ரவீணையில் முதல் மற்றும் ஒரே பெண் கலைஞர் ஆவார். [1] அகில இந்திய வானொலியின் ருத்ரவீணை மற்றும் சித்தாரின் 'ஏ' தரக் கலைஞரான இவர், தொடர்ந்து தனது இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

வாழ்க்கை வரலாறு

தொகு

ஜோதி ஹெக்டே கர்நாடகாவின் வடகன்னட மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமான சிர்சியில் பிறந்து வளர்ந்தார். இவர் தனது 12 வயதில் இருந்தே இசைப் பயிற்சி மேற்கொண்டு வந்தார். தனது 16 வயதில், தனது முதல் ஆசிரியர் பண்டிட் மறைந்த பிந்து மாதவ் பதக்கின் வழிகாட்டுதலின் கீழ் ருத்ரவீணையைக் கற்கத் தொடங்கினார். [1] ருத்ரவீணை மற்றும் சித்தாரில் 15 ஆண்டுகளாக நடந்த ஒரு மராத்தான் ஆய்வு,தனது கலையில் சிறந்து விளங்குவதற்கான தாகத்தை அதிகரித்தது. மேலும் இவர் பண்டிட் இந்துதர் நிரோடியுடன் துருபத பாணியில் பயிற்சி பெற்றார். ருத்ரவீணையில் புகழ்பெற்ற ஆசிரியர் புது தில்லியைச் சேர்ந்த உஸ்தாத் ஆசாத் அலிகான் மற்றும் மும்பையைச் சேர்ந்த உஸ்தாத் பகுதீன் தாகர் ஆகியோர் வழிகாட்டலில் இசையை மேம்படுத்தினார். குரு-சிஷ்ய பரம்பரையில் ஒரு இசைக்கலைஞராக இவரது பரிபூரணத்திலும், இவர் தேர்ச்சி பெற்ற கலைக்கு மரியாதை செலுத்தும் மனப்பான்மையிலும் தன்னை வெளிப்படுத்துகிறார். [2]

விதுஷி ஜோதி ஹெக்டே ருத்ரவீணையின்ன் முதல் மற்றும் ஒரே பெண் வீரர் ஆவார். முற்றிலும் மாறுபட்ட இரண்டு கருவிகளை இசையமைப்பதில் இவர் தனித்துவமானவர். ஜுகல்பந்தி மற்றும் பஞ்ச சித்தார் நிகழ்ச்சிகளை தனது மாணவர்களைக் கொண்டு ஏற்பாடு செய்து வருகிறார். இவரது புகழ் இந்தியா மற்றும் வெளிநாட்டிலிருந்து சீடர்களை ஈர்த்துள்ளது. இவர் ஒரு சிறந்த எழுத்தாளர், ருத்ரவீணையைப் பற்றிய கட்டுரைகளை வெளியிடுகிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

ஜி. எஸ். ஹெக்டே என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் உள்ளார். [1]

விருதுகள் மற்றும் அங்கீகாரம்

தொகு

ஜோதி ஹெக்டே நாத நிதி விருது, கலா சேத்தனா மற்றும் துருபதமணி போன்ற விருதுகளை வென்றுள்ளார். [3]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Jyoti Hegde Biography". பார்க்கப்பட்ட நாள் 2014-06-01.
  2. http://rudraveenajyoti.blogspot.com/search/label/ABOUT%20JYOTI
  3. "Jyoti Hegde Profile" (PDF). Archived from the original (PDF) on 2014-06-05. பார்க்கப்பட்ட நாள் 2014-06-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோதி_ஹெக்டே&oldid=3573431" இலிருந்து மீள்விக்கப்பட்டது