ஜோதி (நெல்)
ஜோதி (Jyothi) எனப்படும் இது; 1977 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, குறுகியகால நெல் வகையாகும்.[1] 115 - 120 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், பி டி பி - 10 (PTB-10) எனும் நெல் இரகத்தையும், ஐ ஆர் - 8 (IR-8) எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். ஈர நிலப் பகுதிகளில் நன்கு வளரத் தக்க இந்த நெற்பயிர், குள்ளமாகவும், இதன் தானியங்கள், நீண்டு தடித்தும், செந்நிறத்திலும் காணப்படுகிறது. ஒரு எக்டேருக்கு சுமார் 2800 கிலோ (28 Q/ha) மகசூல் தரவல்ல இது, கேரள மாநிலத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2]
ஜோதி Jyothi |
---|
ஜெயா நெல் விதை |
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
பி டி பி - 10 x ஐ ஆர் - 8 |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
115 - 120 நாட்கள் |
மகசூல் |
2800 கிலோ |
வெளியீடு |
1977 |
மாநிலம் |
கேரளம் |
நாடு |
இந்தியா |
குறிப்பு
தொகுஜோதி (Jyothi) எனப்படும் இந்த நெல்வகை இந்தியாவின் கேரளம் மாநிலத்தின் நெல் வகையாகும்.[3]
இவற்றையும் காண்க
தொகு- ஜோதி (இருவேறு தமிழ் திரைப்படங்கள்.)
- சக்தி ஜோதி (ஒரு தமிழ் பெண் கவிஞர்)
சான்றுகள்
தொகு- ↑ நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Details of Rice Varieties: Page 1 - 39.Jyothi". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-04-08.
- ↑ Paddy varieties of Kerala