ஜோர்ஷ் கோரி
ஜோர்ஷ் கோரி (Jorge Cori) (பிறப்பு: ஜூலை 30, 1995) பெரு நாட்டைச் சார்ந்தவர். இவர் ஒரு சதுரங்க விளையாட்டு வீரர் ஆவார். இவர் அமெரிக்காவின் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான சதுரங்க வீரர்களில் முதலாமவராகவும், பெரு நாட்டில் மூன்றாமவராகவும், உலக அளவில் 8 வது இடத்திலும் இருந்தார். இவர் 2004 ஆம் ஆண்டு தனது 9 வது வயதில் பைட் மாஸ்டர் (Fide Master) பட்டத்தை வென்றார். 2009 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது 14 வது வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார்.[2][3] இவரது சகோதரி டெய்சி எஸ்டெலா கோரி டெலோ பெண்களுக்கான உலக கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றவர்.
ஜோர்ஷ் கோரி | |
---|---|
ஜோர்ஷ் கோரி, 2012 சதுரங்க ஒலிம்பியார்ட் | |
முழுப் பெயர் | ஜோர்ஷ் கோரி |
நாடு | பெரு |
பிறப்பு | ஜூலை 30, 1995 பெரு |
பட்டம் | சதுரங்க கிராண்ட் மாஸ்டர் |
பிடே தரவுகோள் | 2650 (திசம்பர் 2021) |
உச்சத் தரவுகோள் | 2551 (பெப்ரவரி 2013)[1] |
தரவரிசை | இல. 97 (திசம்பர் 2021) |
மேற்கோள்கள்
தொகு- ↑ FIDE Rating Card of Jorge Cori
- ↑ Jorge Cori becomes Grandmaster at 14 from Susan Polgar's blog
- ↑ "Jorge Cori becomes youngest grandmaster at 14 years". Archived from the original on 2017-08-10. பார்க்கப்பட்ட நாள் 2014-02-06.