ஜோஸ் காண்ட்குவா பஷ்கோ
ஜோஸ் காண்ட்குவா பஷ்கோ (José Condungua Pacheco) என்பவர் 1957 ஆம் ஆண்டு மொசாம்பிக் நாட்டின் சோபாலா மாகாணத்தில் பிறந்தவர் ஆவார். 2010 ஆம் ஆண்டு முதல் மொசாம்பிக்கின் வேளாண் அமைச்சராக இருந்து வருகிறார். அவர் முன்பு உள்துறை அமைச்சராக 2005 முதல் 2009 வரை பணியாற்றினார். பஷ்கோ 1998 ல் இருந்து 2005 வரை கேபோ டெல்கடோ மாகாணத்தின் ஆளுநராக இருந்தார். 1995 முதல் 1998 வரை விவசாயத்துறை துணை அமைச்சராக இருந்தார். அவர் ஒரு சான்றளிக்கப்பட்ட விவசாயத் தொழில்நுட்பப் பொறியியலாளர் ஆவார்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "José Pacheco: Beyond Self-Sufficiency". The Business Year. The Business Year International Inc. Archived from the original on 29 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 20 January 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ http://www.poptel.org.uk/mozambique-news/newsletter/aim293.html#story3
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-09-28. பார்க்கப்பட்ட நாள் 2017-08-05.