ஜோஹா அல்-ஹார்தி

அரேபிய எழுத்தாளர்

ஜோஹா அல்-ஹார்தி (Jokha al-Harthi) ஓர் ஓமான் நாட்டின் எழுத்தாளர் மற்றும் கல்வியாளர் ஆவார். இவர் ஓமனிலும் இங்கிலாந்திலும் கல்விப் பயின்றார்.. எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் அரபு செவ்விலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தற்போது சுல்தான் கபூஸ் பல்கலைக்கழகத்தில் அரபித் துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.[1][2]

ஜோஹா அல்-ஹார்தி
பிறப்புஜூலை 1978 (அகவை 45–46)
ஓமான்
தேசியம்ஓமான்
பணிஎழுத்தாளர் மற்றும் கல்வியாளர்
அறியப்படுவதுமேன் புக்கர் சர்வதேச விருது 2019
குறிப்பிடத்தக்க படைப்புகள்நரிஞ்சா, சய்யிதத் எல்-கமர்

படைப்புகள் தொகு

அல்-ஹார்தி மூன்று சிறுகதைகள், மூன்று நாவல்கள் மற்றும் மூன்று சிறுவர்கள் புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளார். மேலும் இவர் கல்வி பாடப்புத்தகங்கள் உருவாக்குவதிலும் இணைந்து செயல்பட்டுள்ளார். இவரது படைப்புகள் ஆங்கிலம், செர்பியா, கொரியா, இத்தாலி, செர்மன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.[3]

விருதுகள் தொகு

அல்-ஹார்தியின் நரிஞ்சா என்ற நாவலுக்காக 2016 ஆம் ஆண்டு கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியத்திற்கான சுல்தான் கபூஸ் விருது வழங்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு இவரது சய்யிதத் எல்-கமர் என்ற படைப்பு ஜயித் விருதுக்கு பரிந்துரைக்கபட்டது. மேலும் இந்த படைப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு மேன் புக்கர் சர்வதேச விருது பெற்றது.[4][5]

குறிப்புகள் தொகு

  1. "Man Booker International Prize 2019 winner announced". Archived from the original on 2020-10-30.
  2. Starbush (2011-10-24). "the tanjara: start of 3rd ipaf nadwa with 8 emerging arab writers". the tanjara. பார்க்கப்பட்ட நாள் 2020-10-27.
  3. "Archive.org". Archived from the original on 2011-10-28.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  4. "Scribner pre-empts second novel by Booker International winner Jokha Alharthi".
  5. "Women dominate Man Booker International prize 2019 shortlist".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோஹா_அல்-ஹார்தி&oldid=3588299" இலிருந்து மீள்விக்கப்பட்டது