ஜோஹிலா ஆறு
ஜோஹிலா ஆறு, இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் அனூப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமர்காண்டக் மலைகளில் உருவாகிறது. அமர்கண்டக்கிலிருந்து 10 கி.மீ தூரத்திலுள்ள ஜவலேஷ்வர் மலைக்கு அருகில் உள்ள ராஜேந்திரகிராமம் வழியாக செல்கிறது. உமரியா மாவட்டத்திலுள்ள கெல்ஹரி ஆற்றுடன் கலக்கிறது.இவ்வாற்றில் மற்றொரு கிளையாற்றில் நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது.