ஜோ கிராவிட்சு

அமெரிக்க நடிகை, பாடகி மற்றும் வடிவழகி

ஜோ இசபெல்லா கிராவிட்ஸ் (ஆங்கில மொழி: Zoë Isabella Kravitz) (பிறப்பு: திசம்பர் 1, 1988 ) [2] என்பவர் அமெரிக்க நாட்டு நடிகை, பாடகர் மற்றும் வடிவழகி ஆவார். இவர் 2007 ஆம் ஆண்டில் நோ ரிசர்வேஷன்ஸ் என்ற காதல் நகைச்சுவைத் திரைப்படத்தின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து 2011 இல் வெளியான மீநாயகன் திரைப்படமான எக்ஸ்-மென்: ஃபர்ஸ்ட் கிளாஸ்[3] என்ற படத்தில் ஏஞ்சல் சால்வடோர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக டீன் சாய்ஸ் விருது மற்றும் ஸ்க்ரீம் விருதுக்கான பரிந்துரைகளைப் பெற்றார். அதை தொடர்ந்து தி டைவர்ஜென்ட் சீரிஸில் (2014-2016) கிறிஸ்டினாவாகவும், ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் திரைப்படத் தொடரில் (2016-2018) லெட்டா லெஸ்ட்ரேஞ்சாகவும் நடித்ததற்காக இவர் முக்கியமான நடிகை ஆனார்.

ஜோ கிராவிட்சு
பிறப்புஜோ இசபெல்லா கிராவிட்சு
திசம்பர் 1, 1988 (1988-12-01) (அகவை 35)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணி
  • நடிகை
  • பாடகர்
  • வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2007–இன்று வரை
பெற்றோர்லென்னி கிராவிட்ஸ்[1]
லிசா போனட்

அதை தொடர்ந்து ஜெமினி (2017),[4] கின் (2018), கிமி (2022) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் 2022 ஆம் ஆண்டு வெளியான தி பேட்மேன்[5][6] என்ற டிசி வரைகதை மீநாயகன் திரைப்படத்தில் கேட்வுமன் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Bonet, Kravitz Have Baby Girl 7 Lbs., Name Her Zoe". Jet (Johnson Publishing Company): p. 57. December 19, 1988. https://books.google.com/books?id=vq4DAAAAMBAJ&q=zoe+kravitz+born+venice&pg=PA57. 
  2. "The Birth of Zoe Kravitz". California Birth Index. பார்க்கப்பட்ட நாள் June 30, 2019.
  3. McClintock, Pamela (August 17, 2010). "January Jones joins 'X-Men'". Variety. Archived from the original on August 5, 2011. பார்க்கப்பட்ட நாள் August 18, 2010.
  4. Anello, Chloe (June 10, 2016). "Zoë Kravitz Is Starring In A New Thriller Series With John Cho And Lola Kirke". Nylon. பார்க்கப்பட்ட நாள் March 16, 2017.
  5. Kit, Borys (October 14, 2019). "Zoe Kravitz to Star as Catwoman in 'The Batman'". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் October 15, 2019.
  6. Rubin, Rebecca (March 6, 2022). "Box Office: 'The Batman' Scores $128 Million, Second-Biggest Pandemic Debut". Variety. பார்க்கப்பட்ட நாள் March 17, 2022.

வெளிப்புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோ_கிராவிட்சு&oldid=3859721" இலிருந்து மீள்விக்கப்பட்டது