ஞானதீபம் (இதழ்)
ஞானதீபம், 19ம் நூற்றாண்டின் இறுதி தசாப்தத்தில் கண்டியிலிருந்து வெளிவந்த ஓர் இசுலாமிய பத்திரிகையாகும். இது மாதாந்த இதழாக வெளிவந்துள்ளது.
ஆசிரியர்
தொகுஇதன் ஆசிரியர் மு. கா. சித்திலெவ்வை மரைக்கார். அறிஞர் சித்திலெவ்வை என அறியப்பட்ட இவர் இலங்கை வரலாற்றில் முசுலிம்களுக்கென முதல் செய்தி இதழை 1882ம் ஆண்டில் முசுலிம்நேசன் எனும்பெயரில் வெளிக்கொணர்ந்தவர். 1887ம் ஆண்டில் முசுலிம்நேசன் பொறுப்பிலிருந்து சித்திலெவ்வை விலகினார். அதன் பின்பே ஞானதீபம் வெளிவந்துள்ளது.
முதல் இதழ்
தொகுஞானதீபம் முதல் இதழ் 1892 ஆவணி மாதம் வெளிவந்துள்ளது.
உள்ளடக்கம்
தொகுஞானதீபம் இஸ்லாமிய சமய இதழாக காணப்படுகின்றது. இது தமிழ்மொழியில் வெளிவந்தாலும் அரபுச் சொற்களும் கலந்தே உள்ளன.
இறுதி இதழ்
தொகுஞானதீபம் இரண்டாண்டுகளே வெளிவந்துள்ளன. இதன் இறுதி இதழ் 1893ல் வெளிவந்தது. இறுதி இதழில் சித்திலெவ்வை பின்வரும் அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
“ | பத்திரிகை நடத்தப்பட்டாலும், நிறுத்தப்பட்டாலும் இந்நாள்வரை பத்திரிகை வாசித்து வந்த என் உடன்பிறப்பாகிய முஸ்லிம்கள் இந்த சொற்ப அறிவுடைய மிஸ்கீனின் முயற்சியை அங்கீகரித்த தயவுபோல் என்னை மறக்காமல் எனது சலாமத்திற்காக துஆக் கேட்கும்படி கேட்டுக் கொள்ளுகிறேன் | ” |
ஆதாரம்
தொகு- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
- 19ம் நூற்றாண்டின் இதழியல் - புன்னியாமீன் (அல்ஹிலால் இதழ் 6, 1982)