ஞானேந்திரியங்கள்

ஞானேந்திரியங்கள் வெளி உலக பொருட்களைக் குறித்த அறிவை நமக்கு தரும் உடல் உறுப்புகள் ஞானேந்திரியங்கள் ஆகும். கண், காது, மூக்கு, நாக்கு, மற்றும் தோல் ஆகிய உடல் உறுப்புக்களின் மூலம் வெளி உலக அறிவை நாம் அடைவதால், இந்த உடலுறுப்புக்களுக்கு சமசுகிருத மொழியில் ஞானேந்திரியங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த சட உறுப்புகளான காதின் மூலம் ஒலியும், தோல் மூலம் தொடு உணர்வும், கண் மூலம் வெளிப்புற காட்சிகளும், நாக்கின் மூலம் சுவையுணர்வும், மூக்கின் மூலம் மணம் எனும் ஐந்து உணர்வுகள் நமக்கு கிடைப்பதால் இவ்வுறுப்புக்களை ஞானேந்திரியங்கள் என்பர்.

இதனையும் காண்க தொகு

நூல் உதவி தொகு

  • வேதாந்த சாரம், சுலோகம் 63, நூலாசிரியர், ஸ்ரீசதானந்தர், வெளியீடு, இராமகிருஷ்ண மடம், சென்னை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞானேந்திரியங்கள்&oldid=2166508" இலிருந்து மீள்விக்கப்பட்டது