ஞாயிற்றுச்சோழன்

ஞாயிற்றுச்சோழன் சிலப்பதிகாரம் குறிப்பிடும் சோழ அரசன் ஆவான். இவனின் மகள் மணக்கிள்ளி என்பவள் சேர அரசன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மனைவி. கண்ணகிக்குச் சிலை எடுத்த சேரன் செங்குட்டுவன் தாயைச் சிலப்பதிகாரம் திகழொளி ஞாயிற்றுச் சோழன் மகள் என்று குறிப்பிடுகிறது. [1]

அடிக்குறிப்பு

தொகு
  1. குமரியொடு வட இமயத்து ஒருமொழி வைத்து உலகு ஆண்ட சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன் ... செங்குட்டுவன். - சிலப்பதிகாரம் 29 வாழ்த்துக் காதை
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞாயிற்றுச்சோழன்&oldid=2486138" இலிருந்து மீள்விக்கப்பட்டது