டக்கர் சிலுவை

பர்முடா கடலில் மூழ்கிய ஒரு கப்பலில் கிடைத்த விலை மதிப்புமிக்க மரகதக்கல் பதித்த தங்கச் சிலுவை

டக்கரின் சிலுவை (Tucker's Cross) என்பது 1955 ஆம் ஆண்டில் பெர்முடா கடல் ஆராய்ச்சியாளர் டெடி டக்கர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மரகதம் பதித்த 22 காரட் தங்கச் சிலுவை ஆகும். 1594 ஆம் ஆண்டில் மூழ்கிப் போன எசுபானிய கப்பலான சாண்ட் பெட்ரோ என்பதில் இருந்து கிடைத்ததாக நம்பப்படுகிறது.[1]

இதைக் கண்டுபிடித்த, டக்கர் அதன் எளிமை காரணமாக இந்தியத் தயாரிப்புச் சிலுவை என்று நம்பினார்.[2] இருப்பினும், 1997 ஆம் ஆண்டளவில் நேர்ச்சிக்குள்ளான கப்பலில் கண்டுபிடிக்கப்பட்ட மிக விலை மதிப்புமிக்க ஒற்றைப் பொருளாக இது கருதப்பட்டது.[3]

1959 ஆம் ஆண்டு பெர்முடா அரசாங்கத்திற்கு டக்கர் அந்த சிலுவையை ஒரு லட்சம் டாலர் என்ற குறைந்த விலைக்கு விற்றார். எந்தக் காரணத்தைக் கொண்டும் பெர்முடா தீவை விட்டு இந்தச் சிலுவை வெளியே போகக் கூடாது’ என்று அரசிடம் கேட்டுக் கொண்டார். சில வருடங்களுக்கு டக்கரும் அவரது மனைவியுமே அரசின் அருங்காட்சியகத்தை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். அங்கே அந்தச் சிலுவை பாதுகாப்பாக இருந்தது. 1975இல் இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத், டக்கர் சிலுவையைப் பார்வையிட பெர்முடா அருங்காட்சியகத்துக்கு வந்தார். அப்போது தங்க நிறத்தில், பச்சைக் கற்களுடன் ஒரு சிலுவை இருந்தது. ஆனால், அது போலி. அசலான டக்கர் சிலுவை காணாமல் போனது அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Bio of Bermuda Teddy Tucker". BerNews. http://bernews.com/bermuda-profiles/teddy-tucker/. பார்த்த நாள்: 4 November 2013. 
  2. Tucker, Teddy. "How I Found the Cross". Archived from the original on 17 மார்ச் 2018. பார்க்கப்பட்ட நாள் 11 May 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Lam, Brian (August 2011). "Tucker’s Cross: Gold and Swollen With Emeralds, This Was The World’s Most Valuable Sunken Treasure". The Scuttlefish. http://thescuttlefish.com/2011/08/tuckers-cross-gold-and-swollen-with-emeralds-this-was-the-worlds-most-valuable-sunken-treasure/. பார்த்த நாள்: 11 May 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டக்கர்_சிலுவை&oldid=3556396" இலிருந்து மீள்விக்கப்பட்டது