டக்டக்கோ (தேடுபொறி)
டக்டக்கோ என்பது இணையத்தில் உள்ள ஒரு தேடுபொறியாகும். இந்த தேடுபொறி ஆனது ஒருவர் இணையத்தில் என்ன தேடுகிறார் என்பதை பற்றி எந்த விதமான பின்குறிப்பும் எடுத்து வைக்காது ஒருவரது அந்தரங்க தகவல்களை குறித்த தடங்களை பின் தொடராது. மேலும் வினவுகளுக்கு மிக சிறந்த பதில்களை தரவல்லது. இந்த தேடுபொறியை கப்ரியல் வேயன்பெர்க் என்பவர் நிறுவினார், இவரே இதன் தலைமை நிர்வாக அதிகாரியும் ஆவார். இந்த தேடுபொறி நிறுவனம் 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவின், பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள வேலிஃபோர்ஜில் (valleyforge) நிறுவப்பட்டது [2]
வலைத்தள வகை | தேடுபொறி |
---|---|
உரிமையாளர் | DuckDuckGo, Inc. |
உருவாக்கியவர் | கப்ரியல் வேயன்பெர்க் |
மகுட வாசகம் | The search engine that doesn't track you. |
வணிக நோக்கம் | ஆம் |
பதிவு செய்தல் | இல்லை |
வெளியீடு | செப்டம்பர் 25, 2008 |
அலெக்சா நிலை | 604 (சூன் 2014[update])[1] |
தற்போதைய நிலை | இயக்கத்தில் உள்ளது |
உரலி | duckduckgo |
ஒவ்வொரு தேடுபொறியிலும் நாம் கொடுக்கும் வினாவுக்கு ஏற்ப விடைகளை அல்லது இணையப் பக்கங்களின் இணைப்புகளை தொகுத்து வழங்கும்.
தேடுபொறியை பயனர் பெரும்பாலும் கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்கின்றார்,
- தமக்கு உரிய விடைகளை தொகுத்து வழங்குகிறதா.
- வினவு இட்ட உடன் எவ்வளவு விரைவில் பதில் வழங்கப்படுகிறது.
- எத்தனை முறை தேடினாலும் அதே வினாவுக்கு பழைய தகவல்கள் தரப்படுகிறதா அல்லது நொடிக்குநொடி மேம்படுத்தப்பட்ட தகவல்கள் தரப்படுகிறதா
- தங்கள் தேடல்கள் தடம் சேகரிக்காமல் இருக்கப்படுகிறதா.
- உலகில் எந்த அல்லது பல மொழியில் தேடும் வசதி இடப்பட்டு உள்ளதா
- பிராந்திய வழங்கியில் இருந்து நமக்கு தகவல் கிடைக்கப்பட்டாலும் பயனர் பார்வைக்கு அது மூல வழங்கியில் இருந்து பெறப்பட்டதை போன்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும்.
- எந்நாளும் எந்நேரமும் தேடுபொறி இயக்க வல்லதாக இருக்க வேண்டும்
- மடிகணினி, கைபேசி, கைக் கணினி ஆகிய பலதரப்பட்ட வன்பொருட்களிலும் இயக்க வல்லதாக இருக்க வேண்டும்.
மேற்கூறிய அனைத்தும் இந்த தேடுபொறியில் இடம் பெற்று உள்ளன. இத்தேடுபொறியில் இப்பொழுது விளம்பரங்கள் ஏற்கப்படுகிறது.
நிறுவனத் தோற்றம்
தொகுஇந்த தேடுபொறியின் நிறுவனர் கப்ரியல் வேயன்பெர்க் 2008 ஆம் ஆண்டு இதனை உலகுக்கு அளித்தார் .2011 ஆம் ஆண்டு வரை இந்நிறுவனம் தனது சொந்த நிதியில் செயல்பட்டு வந்தது அக்டோபர் 2011 பிறகு யூனியன் ஸ்கொயர் வென்செர்ஸ் மற்றும் சில முதலீட்டாளர்கள் உதவியுடன் இப்போது 20 ஊழியர்கள் மற்றும் பல கட்டற்ற மென்பொருள் பங்கு அளிப்பாளர்கள் உதவியுடன் இயங்கி வருகிறது.[3][4]
வினவு தேடலில் இணைய போக்குவரத்து
தொகுபிப்ரவரி 13 2012ஆம் ஆண்டு ஒரு நாளில் தேடப்பட்ட வினவுகளின் எண்ணிக்கை ஒரு மில்லியன் இலக்கை தாண்டியது (1,067,006) இது அவர்களுக்கு ஒரு மிக பெரிய வெற்றியாக கருதப்பட்டது [5]
- ஜூன் 10 2013 ஆம் ஆண்டு தேடப்பட்ட வினவுகள் இரண்டு மில்லியன் (2,211,203) இலக்கை தாண்டியது[6]
- ஜூன் 17 2013 ஆம் ஆண்டு தேடப்பட்ட வினவுகள் மூன்று மில்லியன்(3,095,907) இலக்கை தாண்டியது[7]
- ஆகஸ்ட் 19 2013 ஆம் ஆண்டு தேடப்பட்ட வினவுகள் நான்கு மில்லியன் (4,153,854)இலக்கை தாண்டியது[8]
- தற்போது மாதத்திற்கு நூறு மில்லியன் வினவுகள் தேடபடுகின்றன.
- டக்டக்கோ உடனடி பதில் அளிக்க வல்ல செயலி நிரலாக்க இடைமுகம் ஒரு நாளைக்கு 10 மில்லயன் வினவுகளை பெறுகிறது. இது டக்டக்கோ நிறுவனத்தின் ஒரு அங்கமாகும்[9]
ஐம்பது சதவிகித பயனர் அமெரிக்காவில் இருந்தும் நாற்பத்து ஐந்து சதவிகித பயனர் ஐரோப்பாவில் இருந்து மீதம் உள்ள ஐந்து சதவிகிதம் ஆசியா பசிபிக்கில் இருந்தும் இந்த தேடுபொறியை பயன்படுத்துகின்றனர். இதன் பயன்களை மக்கள் உணரத் தொடங்கிய பின்னர் ஆசியா பசிபிக்கில் இந்த சதவிகிதம் உயர வாயப்பு உள்ளது
கட்டற்ற மென்பொருள் பயன்பாடு
தொகுஇந்த தேடுபொறி பெர்ல் என்ற நிரலாக்க மற்றும் ஸ்கிரிப்ட் மொழி ,ஜாவாஸ்க்ரிப்ட் மொழியை YUIlibrary கொண்டு nginx ,உபுண்டு போன்ற லினக்ஸ் இயகுதலகல் கொண்டு இயங்குகிறது .இந்நிறுவனம் அதன் சேவைகளை வழங்கும் வழங்கியை (சர்வர் server) அமேசான் EC 2 எனும் மேகக் கணிமை அல்லது கொளுவுக் கணிமை மூலம் உலகெங்கும் வழங்கி வருகிறது .நமக்கு நமது உலவியில் நாம் இந்த தேடுபொறியை பயன்படுத்தும் பொது அது நமக்கு அருகே உள்ள பிராந்திய வழங்கியில் இருந்து நமக்கு தகவல்களை அளிக்கிறது. மூல வழங்கி நாம் வினவுக்கு வழங்கும் அதே பதில்கள் தான் பிராந்திய வழங்கியும் வழங்கும் என் என்றால். அனைத்து பிராந்திய வழங்கிகளும் மேகக் கணிமை மூலம் இணைக்கப்பட்டு உள்ளன ஆகையால் மூல வழங்கியில் ஏற்படும் மாற்றங்கள் பிராந்திய வழங்கியில் மேம்படுதபடுகிறது . இந்த நிகழ்வுகள் நொடிக்கு நொடி நடை பெரும் ஆகையால் பயனர் எப்போதும் மேம்படுத்தப்பட்ட தகவலை பெறுவார். [10] [11] [12] [13] [14]
ஊடங்களில் இத்தேடுபொறி பற்றிய கருத்துகள்
தொகுகூகிள் பொது கொள்கை வலைப்பதிவு
தொகுகூகிள் பொது கொள்கை வலைப்பதிவு ஒன்றில் கூகிள் தேடுபொறிக்கு நேரெதிர் போட்டியாக டக்டக்கோ தேடுபொறி உள்ளது என்றும் பயனர்க்கு தங்கள் தேடுபொறியில் பெறப்பட்ட தகவல் திருப்தி அளிக்காவிட்டால். டக்டக்கோ, பிங் போன்ற மற்ற தேடுபொறியில் பெறும் தகவலை அவர்கள் பயன் படுத்திகொள்ளலாம் என்றது. [15]
சர்ச்யென்ஜின்லேன்ட் என்னும் இணையதளப்பதிவு
தொகுசர்ச்யென்ஜின்லேன்ட் என்னும் இணைய தளத்தில் கூகுளுக்கு டக்டக்கோ மிகப்பெரிய மற்றும் நெடுங்காலத்திற்கான அச்சுறுத்தலாக இருக்கும் என்று கூறப்பட்டது [16]
டைம்ஸ் நாளிதழ் சிறந்த இணையதளப்பட்டியல்
தொகு2011 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஐம்பது இணையதளம் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் சிறந்த இணையதள பட்டியலில் டக்டக்கோ தேடுபொறி இணையதளம் இடம் பெற்றது [17]
தேடல் விருப்பத்தேர்வு
தொகுஇத்தேடுபொறி நிறுவனம் புதுமையான, தேடலை மேம்படுத்தும் வகையிலான கூட்டுபங்கான்மையை வரவேற்கிறது .பல உலாவிகள், இயக்குதளங்கள் ,கைபேசி இயங்குதளகளில் ஆண்ட்ராய்டு இயக்குதளம் போன்ற பலவற்றில் தேடல் விருப்பத் தேர்வாக உள்ளது.
மேலும் இத்தேடுபொறியில் பயனரின் எந்த தகவலும் சேகரிக்கப்படுவதில்லை, அவர்கள் தேடும் தரவுகள் பற்றிய தடம் எவர்க்கும் அளிக்கப்படுவது இல்லை .விளம்பரங்கள் வந்து பயனர்க்கு தொல்லை தருவது முற்றிலும் இல்லை. விளம்பரங்கள் இணைய இணைப்புகளாக மங்கல் நிறத்தில் சிறப்புகூறாக காட்டப்படுகிறது இதன் மூலம் விளம்பர இணைப்புக்கும் தேடல் இடப்பட்ட வினவின் பதிலுக்கும் வேறுபாடு காட்டப்படுகிறது. இது பயனர்க்கு பெரும் உதவியாக உள்ளது[18] அதிகாரப்பூர்வ தளம் என்பது தேடலின் பொழுது சாம்பல் நிறமான அதிகாரப்பூர்வ தளம் என்ற எழுத்துகள் உடைய ஒரு தகவலை கொண்டு இருக்கும்.[19] தானியக்க நிரப்பல் (auto complete) எனப்படும் சேவை இத்தேடுபோறியில் இப்பொழுது சில இயங்குதளத்திற்கு மட்டும் செயல் படுத்தப்பட்டு உள்ளது .
கட்டற்ற மென்பொருளுக்கு நன்கொடைகள்
தொகுஇந்நிறுவனம் தனது ஓட்டு மொத்த வருவாயில் 10 சதவிகிதம் கட்டற்ற மென்பொருள் பயன்பாட்டுக்கு 2010ஆம் ஆண்டு முதல் அளித்து வருகிறது .[20] .
வெளிஇணைப்புகள்
தொகு- ↑ "Duckduckgo.com Site Info". Alexa Internet. Archived from the original on 2014-07-23. பார்க்கப்பட்ட நாள் 2014-06-22.
- ↑ https://duck.co/help/company/history
- ↑ https://duck.co/help/company/history
- ↑ https://twitter.com/duckduckgo/team/members
- ↑ https://duckduckgo.com/traffic.html
- ↑ https://duckduckgo.com/traffic.html
- ↑ https://duckduckgo.com/traffic.html
- ↑ https://duckduckgo.com/traffic.html
- ↑ https://duck.co/help/company/traffic-stats
- ↑ https://en.wikipedia.org/wiki/Nginx
- ↑ https://en.wikipedia.org/wiki/Linux
- ↑ https://en.wikipedia.org/wiki/FreeBSD
- ↑ http://ostatic.com/blog/duckduckgo-a-new-search-engine-built-from-open-source
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-04-22. பார்க்கப்பட்ட நாள் 2013-12-26.
- ↑ http://googlepublicpolicy.blogspot.in/2012/06/setting-record-straight-competition-in.html
- ↑ http://searchengineland.com/could-duckduckgo-be-the-biggest-long-term-threat-to-google-118117
- ↑ http://content.time.com/time/specials/packages/article/0,28804,2087815_2088176_2088178,00.html
- ↑ https://duck.co/help/company/advertising-and-affiliates
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-01-14. பார்க்கப்பட்ட நாள் 2013-12-26.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-01-17. பார்க்கப்பட்ட நாள் 2013-12-26.