டக்ளஸ் டிசி-8
டக்ளஸ் டிசி-8 (Douglas DC-8) அல்லது மக்டொனால்டு டக்ளஸ் டிசி-8 டக்ளஸ் வானூர்தி நிறுவனத்தால் 1958 முதல் 1972 வரை தயாரிக்கப்பட்ட நான்கு-பொறி, நீள்தொலைவு, குறுகிய உடற்பாக, பயணியர் போக்குவரத்திற்கான வணிகமுறை தாரைப்பொறி வானூர்தி ஆகும். போட்டி வானூர்தியான போயிங் 707க்கு எதிராக தயாரிக்கப்பட்ட டிசி-8, வானூர்திகள் சந்தையில் டக்ளஸ் நிறுவனத்திற்கு வலிய இடத்தை பெற்றுத் தந்தது. 1972இல் மற்ற பரந்த உடற்பாக வானூர்திகள் வடிவமைக்கப்படும் வரை இவை தயாரிக்கப்பட்டு வந்தன. டிசி-8இன் வடிவமைப்பினால் 707ஐ விட கூடுதலான சரக்குகளை எடுத்துச் செல்ல முடிந்தது. பொறிகள் மீளமைக்கப்பட்ட டிசி-8 வானூர்திகள் இன்றளவிலும் சரக்கு வானூர்திகளாக சேவை புரிகின்றன.
டிசி-8 | |
---|---|
ஏர் ஜெமைக்காவின் டிசி-8-62எச் இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையத்தை நெருங்குதல் (1978) | |
வகை | குறுகிய உடற்பாக தாரைப்பொறி வானூர்தி |
உருவாக்கிய நாடு | ஐக்கிய அமெரிக்கா |
உற்பத்தியாளர் | டக்ளஸ் வானூர்தி மக்டொனால்டு டக்ளஸ் |
முதல் பயணம் | மே 30, 1958 |
அறிமுகம் | செப்டம்பர் 18, 1959 யுனைட்டெட் ஏர்லைன்சுடனும் டெல்டா ஏர்லைன்சுடனும் |
தற்போதைய நிலை | மட்டுப்பட்ட சரக்கு, பயணியர் போக்குவரத்தில் |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | ஏர் டிரான்ஸ்போர்ட் இன்டர்நேசனல் ஏ இசுடார் ஏர் கார்கோ ஜான்சன்சு ஏர் |
உற்பத்தி | 1958–1972 |
தயாரிப்பு எண்ணிக்கை | 556 |