இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம்

இலண்டனிலுள்ள முதன்மையான பன்னாட்டு வானூர்தி நிலையம்

இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம், (London Heathrow Airport) அல்லது ஹீத்ரோ[1] ஐக்கிய இராச்சியத்தின் முதன்மையான, மிகவும் நெருக்கடிமிக்க வானூர்தி நிலையம் ஆகும். ஹீத்ரோ ஐரோப்பாவின் மிகவும் பயணியர் போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாகவும் விளங்குகிறது. உலகின் வேறெந்த வானூர்தி நிலையத்தை விடக் கூடுதலான பன்னாட்டு பயணியர் போக்குவரத்தைக் கொண்டிருக்கிறது.[2]

இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம்
இலண்டன் ஹீத்ரோ முனையம் 5 கட்டிடம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொதுத்துறை
உரிமையாளர்பிஏஏ நிறுவனம்
இயக்குனர்ஹீத்ரோ வானூர்தி நிலைய நிறுவனம்
அமைவிடம்இல்லிங்டன் பரோ, இலண்டன், ஐக்கிய இராச்சியம்
மையம்
  • பிரித்தானிய ஏல்வேசு
  • பிஎம்ஐ
உயரம் AMSL83 ft / 25 m
இணையத்தளம்www.heathrowairport.com
நிலப்படம்
EGLL is located in Greater London
EGLL
EGLL
இலண்டன் பெருநகரில் அமைவிடம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
09L/27R 3,901 12,799 காடியுடை நீலக்கீல் கான்கிறீற்று
09R/27L 3,660 12,008 காடியுடை நீலக்கீல் கான்கிறீற்று
புள்ளிவிவரங்கள் (2011+2010)
பயணியர்65,881,660
பயணியர் மாற்றம் 09-107.7% (2011)
வானூர்தி இயக்கங்கள்454,823
இயக்கங்கள் மாற்றம் 09-102.5% (2010)
மூலம்: தேசிய வான் போக்குவரத்து சேவைகள் மற்றும் ஐரோகண்ட்ரோலில் உள்ள யூகே வான்ப்பறப்பு தகவல் பதிப்பு
ஐக்கிய இராச்சிய குடிமை வான்பறப்பு ஆணையத்தின் புள்ளிவிவரங்கள்
இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையத்தில் புறப்படத் தயாராக வரிசையில் காத்திருக்கும் வானூர்திகள்
இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம், முனையம் 3

ஹீத்ரோ பிஏஏ நிறுவனத்திற்கு உடமையானது; அந்நிறுவனமே இந்த வானூர்தி நிலையத்தை இயக்குகிறது. இந்த நிறுவனத்திற்கு ஐக்கிய இராச்சியத்தில் மேலும் ஆறு நிலையங்கள் உடமையாக உள்ளன.[3] இந்த நிறுவனம் எசுப்பானிய ஃபெரோவியல் நிறுவனத்திற்கு சொந்தமானது.[4] பிரித்தானிய ஏர்வேசின் முதன்மை அச்சுமையமாக ஹீத்ரோ விளங்குகிறது; பிஎம்ஐ நிறுவனத்திற்கு பெரிய அச்சு மையமாக உள்ளது.

ஹீத்ரோ மத்திய இலண்டனின் மேற்கில் 15 மைல்கள் (24 km) தொலைவில் இல்லிங்டன் பரோவில் 12.14 சதுரகி.மீ (4.69 ச.மைல்) பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு இரு இணையான ஓடுபாதைகள் கிழக்கு மேற்காக உள்ளன. ஐந்து வானூர்தி நிலைய முனையங்கள் உள்ளன. மூன்றாவது ஓடுபாதை அமைக்க திட்டங்கள் உரையாடப்படுகின்றன.

ஓடுபாதை பயன்பாடு தொகு

ஹீத்ரோ இரண்டு ஓடுபாதைகளையும் செயல்பாட்டில் வைத்துள்ளது. இவை:

  • வடக்கு ஓடுபாதை (09L/27R)
  • தெற்கு ஓடுபாதை (09R/27L).

தற்போது, அந்த நேரத்தில் மேற்கொள்ளும் அணுக்கப் பாதையையொட்டி, ஒரு ஓடுபாதை புறப்படுவதற்கும் மற்றொன்று இறங்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. அணுகுகின்ற வானூர்திகளுக்கு பொதுவாக இரு தேர்வுகளுக்கும் இடையே 12 மணிநேர சுழற்சியில் ஓடுபாதைகள் வழங்கப்படுகின்றன. இதனால் அண்மையில் வசிப்போருக்கு இரைச்சல் குறைவாகவும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படாதும் உள்ளது. எதிர்காலத்தில் போக்குவரத்து நெருக்கடி கூடினால் இரு ஓடுபாதைகளிலும் ஏறவும் இறங்கவும் அனுமதிக்கப்படும்.

மேற்சான்றுகள் தொகு

  1. (ஐஏடிஏ: LHRஐசிஏஓ: EGLL)
  2. "Busiest Airports - the busiest airports in the world". Archived from the original on 2017-02-18. பார்க்கப்பட்ட நாள் 2013-03-06.
  3. "UK airports owned and operated by BAA". Archived from the original on 2007-10-08. பார்க்கப்பட்ட நாள் 2013-03-06.
  4. "BAA: "Who owns us?"". Archived from the original on 2007-10-08. பார்க்கப்பட்ட நாள் 2013-03-06.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
London Heathrow Airport
என்பதில் ஊடகங்கள் உள்ளன.