டக்ஸ் பெயிண்ட் (மென்பொருள்)

(டக்ஸ் பெயிண்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டக்ஸ் பெயிண்ட் என்பது 3 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் படம் வரைவதற்காக உதவும் ஒரு கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள். இத் திட்டத்தை 2002 இல் பில் கென்றிக் என்பவர் தொடங்கினர். அதன் பின்னர் ஏராளமான தொண்டர்களின் உதவியுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தனிஉரிமை மென்பொருளுக்கு (கிட் பிக்ஸ்) நிகரான கல்வி மென்பொருளாக இது திகழ்கிறது. இது குனூ பொதுமக்கள் உரிமம் கீழ் வழங்கப்படுகின்றது.

டக்ஸ் பெயிண்ட்
உருவாக்குனர்பில் கென்றிக், et al.
அண்மை வெளியீடு0.9.22 / ஆகஸ்டு 24, 2014
மொழிசி
தளம்கே டீ ஈ
மென்பொருள் வகைமைசெவ்வக கிராபிக்ஸ் தொகுப்பு
உரிமம்குனூ பொதுமக்கள் உரிமம்
இணையத்தளம்www.tuxpaint.org

தனிபண்புகள்

தொகு
  • பல்வேறு அடிப்படைக் கருவிகள் மற்றும் பயன்பாட்டு கட்டுப்பாடுகள் கொண்டுள்ளது. (எ-கா புதிய, அச்சு, சேமிக்க, மீளமை)
  • படங்கள் வரைய மற்றும் திருத்தப்பட்ட கேன்வாஸ் உதவுகிறது.
  • நிறங்களை தேர்வு செய்ய வண்ணத் தட்டு.
  • மாயக் கருவி கொண்டு வரைகலை உருவாக்குதல்.
  • பல்வேறு தளங்களில் இயங்கும் (எ-கா விண்டோஸ், லினக்ஸ், மாக்)
  • தகவல்கள், அறிவுறுத்தல்கள், குறிப்புகள் மற்றும் உற்சாகத்தையும் வழங்குகிறது.

வெளி இணைப்புகள்

தொகு