டசுனர் மொழி
டசுனர் மொழி என்பது இந்தோனேசியாவின் பபுவா தீவுப் பகுதியில் பேசப்பட்டு வரும் ஒரு மொழியாகும். இம்மொழி 2011 ஏப்ரல் மாதம் ஆய்வாளர்கள் செய்த ஆய்வின் படி அழிவின் விளிம்பிலுள்ள மொழியெனெ பதிவு செய்துள்ளனர். இம்மொழி தற்போது வெறும் 3 பேரால் மட்டுமே பேசப்பட்டு வருகின்றது. இவர்களது வயது 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரும் ஆகும்.
ஆய்வாளர்கள் பயணம்
தொகுடசுனர் எனும் மொழியை கடந்த ஆண்டே மொழி ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தோனேசியாவின் மேற்கு பபுவா மாகாணத்தில் உள்ள மீன் பிடிக் கிராமத்தைச் சேர்ந்த 3 பேரே இம்மொழியை அறிந்தவர்களாவர். அதுவும் சிறப்பு நிகழ்வின் போது மட்டுமே அவர்களாலும் பேசப்படுகின்றது.
இம்மொழி அழிந்து போகும் சாத்தியங்கள் மிக அதிகமாக இருப்பதனால், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் அங்கு சென்று அம்மொழியை பதிவுசெய்தனர். இம்மொழியைப் பேசி வந்த சிலர் அங்கு அடிக்கடி இடம்பெறும் இயற்கை அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை பாதுகாப்பதற்காக ஆய்வாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் உள்ளன.
மொழி அழிவிற்கான காரணம்
தொகுஇம்மொழியைப் பேசுவந்த வந்த சிலர் அங்கு அடிக்கடி இடம்பெற்ற இயற்கை பேரழிவுகளால் உயிரிழந்தனர் என்பது ஒரு காரணமாக பார்க்கப்படும் அதேநேரம். அப்பகுதிகளில் மலாய் மொழியின் செல்வாக்கு அதிகரித்ததைத் தொடர்ந்தே, சிறுபான்மை மொழியான "டசுனர்" மொழி பேசுவோரின் மொழி செல்வாக்கு இழந்து, தமது குழந்தைகளுக்கும் கற்பிக்காமல் விட்டதனால், இன்று இம்மொழி அழிவின் விழிம்பில் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
வெளியிணைப்பு
தொகு- டசுனர் மொழி பரணிடப்பட்டது 2011-04-29 at the வந்தவழி இயந்திரம்