டச்சு இந்தியா
டச்சு இந்தியா (Dutch India), (ஆட்சிக் காலம்:1605 – 1825), நெதர்லாந்து நாடு, 1605 முதல் கிழக்கிந்திய டச்சு கம்பெனியை துவக்கி, இந்தியாவில் உள்ள கடற்கரை பகுதிகளை இந்திய மன்னர்களிடமிருந்து கைப்பற்றி, கோட்டை கொத்தளங்கள் மற்றும் குடியிருப்புகளை அமைத்து இந்தியாவில் 1605 முதல் 1825 முடிய வணிகம் செய்தனர்.

![]() | |
குடிமைப்பட்ட கால இந்தியா | |
---|---|
டச்சு இந்தியா | 1605–1825 |
டேனிஷ் இந்தியா | 1620–1869 |
போர்த்துகேய இந்தியா 1510–1961 | |
காசா ட இந்தியா (இந்திய மாளிகை) | 1434–1833 |
போர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனி | 1628–1633 |
பிரித்தானிய இந்தியா 1613–1947 | |
பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி | 1612–1757 |
இந்தியாவில் கம்பெனி ஆட்சி | 1757–1857 |
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு | 1858–1947 |
பர்மாவில் பிரித்தானிய ஆட்சி | 1824–1942 |
சுதேச சமஸ்தானங்கள் | 1765–1947/48 |
இந்தியப் பிரிவினை | |
1824இல் ஏற்பட்ட ஆங்கிலேய-டச்சு உடன்படிக்கையின்படி, டச்சுக்காரர்கள் இந்தியாவில் தாங்கள் வணிகம் செய்த பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களிடம் விட்டுக் கொடுத்து, மார்ச் 1825இல் இந்தியாவை விட்டு வெளியேறினர்.[1][2]
வணிகம் தொகு
இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதிகளில் மலபார், கண்ணனூர், கொச்சி, கொல்லம், காம்பத், சூரத், பரோடா, பரூச், கண்ணனூர், கன்னியாகுமரி பகுதிகளிலும், கிழக்கு கடற்கரை பகுதிகளில் தூத்துக்குடி, தரங்கம்பாடி, புலிக்காட், நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை, மசூலிப்பட்டினம், டாக்கா, ஹூக்ளி, பிப்பிலி பகுதிகளிலும், மற்றும் அகமதாபாத், முர்சிதாபாத், ஆக்ரா, கான்பூர், பாட்னா, கோல்கொண்டா போன்ற பகுதிகளில் துணிமனிகள், நவரத்தினங்கள், பட்டுத்துணிகள், கண்ணாடி பொருட்கள், பீங்கான் பொருட்கள், அபின், மிளகு முதலியவற்றை இந்தியாவில் வணிகம் செய்தனர்.
டச்சு நாணயம் தொகு
டச்சு இந்திய கம்பெனி, கொச்சி, மசூலிப்பட்டினம், நாகப்பட்டினம், பாண்டிச்சேரி மற்றும் புலிக்காட் பகுதிகளில் வணிகம் செய்ததுடன், தங்க பகோடா நாணயங்களை வெளியிட்டது.
வணிகம் செய்த பகுதிகள் தொகு
இந்தியத் துணை கண்டத்தில் டச்சு இந்திய வணிக கம்பெனியினர் 1605ஆம் ஆண்டு முதல் 1825 முடிய வணிகம் செய்த தெற்காசியப் பகுதிகள்;