டன்கிர்க்
டன்கிர்க் (பிரெஞ்சு: Dunkerque) பிரான்சில் உள்ள ஒரு துறைமுக நகரம். இது பிரான்சின் வடபகுதியில் பெல்ஜிய நாட்டு எல்லையிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் அட்லாண்டிக் கரையோரமாக அமைந்துள்ளது. டன்கிர்க் எனும் பெயர் அப்பகுதிக்கான கம்யூன் எனப்படும் பிரெஞ்சு நிர்வாகப் பிரிவிற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மக்கள் தொகை 70,850 (1999).