டாகினி

(டாகினிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டாகினி (Dakini, வடமொழி: डाकिनी, சீன மொழி: 空行女,荼吉尼,狐仙,明妃) என்பது திபெத்தில் வணங்கப்படும் பௌத்த பெண் தேவதாமூர்த்திளைக் குறிக்கும்.

நடனமாடும் டாகினி (திபெத்), 18ம் நூற்றாண்டு
வஜ்ரயோகினி

திபெத்திய மொழியில் டாகினி என்ற பதம் கந்த்ரோமா என உள்ளது. இதற்கு "வானத்தில் செல்பவள்" என்று பொருள். டாகினிகள் எப்போது நடன நளினமான கோலத்திலே சித்தரிக்கப்படுகின்றனர். இவர்கள் ஆற்றலின் உருவகமாக இருப்பதால் இவர்கள் நடன கோலத்தில் காட்டப்படுகின்றனர். டாகினில் அழகாகவும் ஆடையற்ற நிலையிலும் சித்தரிக்கப்படுகின்றனர். இது தடைகள் மற்றும் அழுக்க்கள் இல்லாத தூய மன நிலையை குறிப்பதாக கருதப்படுகிறது. எனவே தான் இவர்கள் வானத்தை ஆடையாக அணிந்தவர்களாக(திகம்பர) விவரிக்கப்படுகின்றனர். அவர்களின் அசைவுகள் மனதின் ஏற்படும் எண்னங்களை குறிப்பதாக அமைந்துள்ளது.

வஜ்ரயான பௌத்ததில் அதுவும் இமாலயத்தை ஒட்டிய பகுதிகளில் டாகினிகள் ஆன்மீகத்தும் ஊக்கமளிக்கவராக கருதப்படுகின்றனர். டாகினிகள் எண்ணங்களின் ஆற்றலின் பெண் வடிவமாகவும் விண்ணில் ஆற்றலை தோற்றுவிப்பவர்களாகவும் வணங்கப்படுகின்றனர். மேற்கூறிய பொருளில் விண் என்பது சூன்யத்தன்மையின் உருவகம் ஆகும்

டாகினிகள் சோதனை செய்வர்களாக இருக்கின்றனர். டாகினிகள் ஆன்மிக நிலையில் உயர விரும்பவர்கள் முன் தோன்றி அவர்களின் காம இச்சையை பரிசோதனை செய்வர். திபெத்தில் மகாசித்தர்களாக ஆவதற்கு நினைப்பவர்களின் முன் தோன்றி டாகினிகள் அவர்களை திசை திருப்ப முயற்சி செய்வர். அவர்கள் டாகினியின் சோதனையில் வெற்றியடைந்தாள் மகாசித்தராக ஏற்றுக்கொள்ளப்பட்டு டாகினியின் உலகில் ஏற்றுக்கொள்ளப்படுவர்.

பாரம்பர்யத்தின் படி, ஒரு டாகின் மூன்றாம் கர்மபாவுக்கு (1284 - 1339) கருப்பு தொப்பியினை கார்மபா மூன்று வயதாக இருக்கும் போது அளித்தாதக கூறப்படுகிறது. அன்றிலிருந்து இந்த கருப்பு தொப்பி கர்மபாக்களின் அடையாளமாக கருதப்படுகின்றது.

டாகினிகள் ஆற்றலுடன் தொடர்பு படுதப்படுவதால் இவர்கள் அனுத்தர தந்திரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்த தந்திரங்களில் தீய எண்ண (கிலேஷம்) ஆற்றல்களை ஞான ஆற்றலாக இவர்கள் மாற்றுகின்றனர்.

சித்தரிப்பு

தொகு

டாகினிகள் இளமையான ஆடையற்ற பென் நடன கோலத்தில் ஒரு கையில் கபாலத்துடனும் இன்னொரு கையில் குறுவாள் உடனும் சித்தரிக்கப்படுகின்றனர். டாகினிகள் மனித மண்டை ஓடுகளால் ஆன மாலையை அணிந்து தோளில் திரிசூலம் சாய்ந்தவாறும் காட்சியளிக்கின்றனர். டாகினி கூந்தல் பெரும்பாலும் கரை புரண்டோடும் நிலையில் சவத்தின் மீது நடனமாடியவாறு இருப்பார். அறியாமை மற்றும் ஆணவத்தின் உருவகமாக சவம் கருதப்படுகிறது. டாகினியின் இந்த நடனம் ஆணவத்தையும் அறியாமையையும் ஆட்கொண்டதை காட்டுகிறது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாகினி&oldid=3214411" இலிருந்து மீள்விக்கப்பட்டது