டாக்கா அணு சக்தி மையம்

வங்காள தேசத்திலுள்ள ஆராய்ச்சி நிறுவனம்

டாக்கா அணு சக்தி மையம் (Atomic Energy Centre, Dhaka) வங்காளதேசத்தின் மிகப்பழமையான அணு ஆராய்ச்சி நிலையமாகும். இம்மையம் வங்காளதேசத்தின் டாக்கா நகரில் அமைந்துள்ளது. [1][2][3]டாக்கா பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைந்துள்ள இம்மையம் வங்காளதேச அணுசக்தி ஆணையத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இயங்குகிறது[4]

அணு சக்தி மையம்
Atomic Energy Centre
পরমাণু শক্তি কেন্দ্র
உருவாக்கம்1964
நோக்கம்அணு ஆராய்ச்சி
தலைமையகம்டாக்கா, வங்காளதேசம்
சேவை பகுதி
வங்காளதேசம்
ஆட்சி மொழி
வங்காளி
வலைத்தளம்Atomic Energy Centre

வரலாறு

தொகு

டாக்கா அணு சக்தி மையம் 1964 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கட்டி முடிக்கப்பட்டது. 1965 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதியன்று பாக்கித்தான் அணுசக்தி ஆணையகத்தால் முறையாகத் திறந்துவைக்கப்பட்டது. இங்கு 5000 கியூரி அளவு கோபால்ட்-60 காமாகதிர் வீச்சு மூலமும், ஐபிஎம் 1620 கணினியும், வான்டிகிராஃப் நிலை மின்னியற்றி வசதியும் இருந்தன. 1971 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி வங்காள தேசத்தின் விடுதலைப் போர் முடிவடைந்து நாடுசுதந்திரநாடாகமாறியது. 1972 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 3 ஆம் தேதியன்று கல்வி மற்றும் கலாச்சார அமைச்சகத்திலிருந்து அணு விவகாரங்களுக்குப் பொறுப்பான ஒரு விஞ்ஞானி சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 1973 ஆம்ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று குடியரசுத் தலைவர் உத்தரவின் மூலம் வங்காள தேச அணுசக்தி ஆணையம் அமைக்கப்பட்டு அதன் கீழ் இம்மையம் கொண்டு வரப்பட்டது. ஈரடோம் -24 மற்றும் ஈரடோம் -38 என்ற பெயர்களில் அதிக மகசூல் தரும் இரண்டு அரிசிவகைகள் மற்றும் ஐப்ரோசோல் என்ற ஓர் உயர் விளைச்சல் பயிரினம் ஆகியனவற்றை இம்மையம் உருவாக்கியது. கதிர்வீச்சு மற்றும் மருத்துவ உபகரணங்களின் நோய் நுண்மிகளை ஒழிப்பதன் மூலம் உணவைப் பாதுகாக்கும் வழி முறைகளை இந்த மையம் ஆய்வு செய்தது. [1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Haque, MiahMdSirajul. "Atomic Energy Centre, Dhaka". Banglapedia (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 December 2017.
  2. "Forty one years of Bangladesh Atomic Energy Commission" (in en). The Daily Star. 1 March 2014. http://www.thedailystar.net/forty-one-years-of-bangladesh-atomic-energy-commission-13460. 
  3. Murshed, C Z. "An academic visit to Atomic Energy Centre". The Daily Star. http://archive.thedailystar.net/campus/2009/04/01/feature_atomic.htm. 
  4. "Powerless for 3 weeks!" (in en). The Daily Star. 4 October 2011. http://www.thedailystar.net/news-detail-205123. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாக்கா_அணு_சக்தி_மையம்&oldid=3609944" இலிருந்து மீள்விக்கப்பட்டது