டாக்சோட்டைடீ
டாக்சோட்டைடீ | |
---|---|
டாக்சோட்டீசு சாக்குலாட்ரிக்சு (Toxotes jaculatrix) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | டாக்சோட்டைடீ
|
பேரினங்கள் | |
கட்டுரையில் பார்க்கவும். |
டாக்சோட்டைடீ (Toxotidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை தமது வாயைப் பயன்படுத்தி நீர்த்துளிகளை வீசி, சிறிய பூச்சிகளையும், வேறு சிறிய உயிரினங்களையும் நீரில் விழுத்தி அவற்றை இரையாக்குகின்றன. பெரிய கீழ்த் தாடை அவை வேட்டையாடுவதற்கு உதவியாக உள்ளன. டாக்சோட்டீசு என்னும் ஒரே பேரினத்தில் ஆறு இனங்களைக் கொண்ட மிகச் சிறிய குடும்பம் இது. இவை, இந்தியா முதல், பிலிப்பைன்சு, ஆசுத்திரேலியா, பாலினீசியா ஆகிய பகுதிகளில் உள்ள நன்னீர், உவர்நீர், கடல்நீர் ஆகியவற்றில் வாழ்கின்றன.
இனங்கள்
தொகு- டாசிட்டீசு பிளித்தியை (Toxotes blythii)பூலெங்கர், 1892.
- டாசிட்டீசு சட்டாரியசு (Toxotes chatareus)(அமில்ட்டன், 1822).
- டாசிட்டீசு சக்குலாட்ரிக்சு (Toxotes jaculatrix)(பல்லாசு, 1767).
- டாசிட்டீசு கிம்பர்லேயென்சிசு (Toxotes kimberleyensis)அலன், 2004.
- டாசிட்டீசு லோரென்சி (Toxotes lorentzi)வெபர், 1910.
- டாசிட்டீசு மைக்குரோலெப்சிசு (Toxotes microlepis)குந்தர், 1860.
- டாசிட்டீசு ஆலிகோலெப்சிசு (Toxotes oligolepis)பிளீக்கர், 1876.
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கில மொழியில்)