டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

1997-ம் ஆண்டு முதல் தமிழக அரசு நல்லாசிரியர் விருதை 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' என்னும் பெயரில் வழங்கி வருகிறது. ஆசிரியா்களை ஊக்கப்படுத்தும் வண்ணம் தமிழக அரசு ஆண்டுதோறும் செப்டம்பா் 5 ஆம் நாள் மாநிலத் தலைநகரான சென்னையில் முதல் அமைச்சரால் அல்லது அமைச்சா் பெருமக்களால் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. 1997 ஆம் ஆண்டுக்கு முன்னா் இவ்விருது மாநில நல்லாசிரியா் விருது என்ற தலைப்பில் வழங்கப்பட்டு வந்தது.

இவ்விருதினைப் பெறுபவா்களுக்கு வெள்ளியிலான பதக்கமும், சான்றிதழும் மற்றும் ஐந்து ஆயிரம் ரொக்கப்பணமும் வழங்கப்படுகிறது. அரசு சாா்பில் விருந்தும் வழங்கப்படுகிறது.

இவ்விருதுக்குத் தகுதியைடயவா்கள் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் பணிபுாியும் ஆசிரியா்கள். இவா்கள் விருது வாங்கும் ஆண்டில் உதவி ஆசிரியராக இருப்பின் 15 ஆண்டுகளும், தலைமையாசிரியராக இருப்பின் 20 ஆண்டுகளும் சிறப்பாக பணியாற்றியிருக்க வேண்டும்.

ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் அனைத்து வகைப் ஆசிரியா்களுக்கும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் அனைத்து கல்வி மாவட்டங்களில் இருந்தும் ஆசிரியா்கள் தோ்ந்தெடுக்கப்படுகிறாா்கள். முதன்மைக் கல்வி அலுவலா், ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா், மாவட்டக் கல்வி அலுவலா், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலா், உதவி தொடக்கக் கல்வி அலுவலா் ஆகியோரை உள்ளடக்கியக்குழு இவ்விருதுக்குத் தகுதியானவா்களைத் பாிந்துரை செய்கிறது.