டாப்சன் அலகு

டாப்சன் அலகு (Dobson Unit, DU) என்பது புவியின் வளிமண்டலத்தின் வழியாக செங்குத்து நெடுவரிசையில் ஒரு சுவடு-காண் வாயுவின் அளவை அளவிடும் ஒரு அலகு ஆகும். இவ்வலகு வளிமண்டல ஓசோன் தொடர்பாக உருவாகி, தொடர்ந்து ஓசோன் அடுக்கில் ஏற்பட்டுள்ள ஓட்டையின் அளவைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகிறது, அதன் மொத்த நெடுவரிசை அளவு, பொதுவாக "மொத்த ஓசோன்" என்றும், சில நேரங்களில் "நெடுவரிசை மிகுதி" (column abundance) என்றும் அழைக்கப்படுகிறது. இது அடுக்கு மண்டல ஓசோன் அடுக்கில் ஓசோனின் அதிக செறிவுகளால் ஆதிக்கம் செலுத்துகிறது.

டாப்சன் அலகு திட்ட வெப்ப அழுத்த (STP) நிலையான நிலைமைகளில் மொத்த நெடுவரிசைத் தொகையால் உருவாகும் தூய்மையான வாயுவின் அடுக்கின் தடிப்பு (10μm அலகுகளில்) என வரையறுக்கப்படுகிறது.[1][2] இது சில நேரங்களில் 'மில்லி-அட்மோ-சென்டிமீட்டர்' என்றும் குறிப்பிடப்படுகிறது. 300 DU வளிமண்டல ஓசோனின் ஒரு பொதுவான நெடுவரிசை அளவு, புவியின் மேற்பரப்பில் 3 மிமீ அடுக்கு தூய வாயுவை உருவாக்கும் (திட்ட வெப்ப அழுத்தத்தில்).

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளரான கோர்டன் டாப்சனின் பெயரால் டாப்சன் அலகு பெயரிடப்பட்டது. இவர் 1920களில் மொத்த ஓசோனை தரையில் இருந்து அளவிடுவதற்கான முதல் கருவியை உருவாக்கினார். ஓசோன் அடுக்கு மூலமான சூரிய புறவூதாக் கதிர்வீச்சின் வெவ்வேறு பட்டைகளின் மாறுபட்ட உறிஞ்சுதலை அளவிட இரட்டை வில்லை ஒருநிறமாக்கியை அவர் பயன்படுத்தினார். டாப்சன் ஓசோன் நிறமாலையொளிமானி என இக்கருவி அழைக்கப்படுகிறது. இக்கருவியே வளிமண்டல ஓசோனைக் கண்காணிப்பதற்கான உலகளாவிய வலையமைப்பின் முதுகெலும்பாக அமைந்துள்ளது[3] அத்துடன் 1984 ஆம் ஆண்டில் அண்டார்டிக் ஓசோன் துளை கண்டுபிடிக்கப்பட்டதற்கான ஆதாரமாகவும் இது இருந்தது.[4]

அனைத்துலக முறை அலகுடனான தொடர்பு

தொகு

டாப்சன் அலகு அனைத்துலக முறை அலகின் ஒரு பகுதி அல்ல. இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக, 1982-ஆம் ஆண்டில் ஒரு சுருக்கமான ஆய்வு நடத்தப்பட்டபோது,[5] ஓசோன் மட்டுமல்லாமல், எந்தக் கோளினதும் வளிமண்டலத்தில் உள்ள எந்த வாயுவின் நெடுவரிசை அளவுகளுக்கு ஏற்ற பல மாற்று SI- அடிப்படையிலான அலகுகளை ஆராயப்பட்டது. இதன்போது, அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒரு சதுர மீட்டருக்கு மோல் அலகு பயன்படுத்த முன்மொழியப்பட்டது. இதற்காக சதுர மீட்டருக்கு மைக்ரோ மோல்களின் அளவில் பூமியின் சுவடு வாயுக்கள் முதல், வெள்ளிக் கோளின் சதுர மீட்டருக்கு மெகா மோல்களில் கார்பனீராக்சைடு வரை எடுத்துக்காட்டப்பட்டன:

பூமியின் வளிமண்டலத்தில் மொத்த ஓசோனின் பொதுவான மதிப்புகள் ஒரு சதுர மீட்டருக்கு மில்லிமோல்களில் (mmol/m2) வசதியாக குறிப்பிடப்படுகின்றன

மேற்கோள்கள்

தொகு
  1. "Ozone Hole Watch: Facts About Dobson Units". Archived from the original on 2017-02-18. பார்க்கப்பட்ட நாள் 2020-07-12.
  2. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "Dobson unit in atmospheric chemistry". Compendium of Chemical Terminology Internet edition.
  3. Staehelin, Johannes (2008). "Global atmospheric ozone monitoring". WMO Bulletin 57 (1). https://public.wmo.int/en/bulletin/global-atmospheric-ozone-monitoring. 
  4. Farman, J. C.; Gardiner, B. G.; Shankin, J. D. (1985). "Large losses of total ozone in Antarctica reveal seasonal ClOx/NOx interaction". Nature 315 (16 May 1985): 207–210. doi:10.1038/315207a0. Bibcode: 1985Natur.315..207F. 
  5. Reid E. Basher (1982). "Units For Column Amounts of Ozone and Other Atmospheric Gases". Quart. J. Royal Met. Soc. 108 (456): 460–462. doi:10.1002/qj.49710845611. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாப்சன்_அலகு&oldid=3676496" இலிருந்து மீள்விக்கப்பட்டது