டார்லிங் ஆறு

டார்லிங் ஆறு (Darling River) ஆத்திரேலியாவின் நீளமான ஆறுகளில் ஒன்றாகும். இது உலகத்தின் பெரிய ஆற்று ஆமைப்புகளில் ஒன்றான முர்ரே-டார்லிங் ஆற்று அமைப்பின் அங்கமாகும். கிரேட் டிவைடிங் ரேஞ்சிற்கு மேற்கேயுள்ள நியூ சவுத் வேல்சு முழுமைக்கும், வடக்கு விக்டோரியாவின் பெரும்பகுதிக்கும், தெற்கு குயின்ஸ்லாந்து மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவின் பகுதிகளுக்கும் பாசனம் வழங்குகின்றது.[1][2][3]

டார்லிங் ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்நியூ சவுத் வேல்சின் வென்ட்வொர்த்தில் முர்ரே ஆற்றுடன் கலக்கிறது
நீளம்2,739 கிமீ (1,701 மைல்)

1828இல் நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர் சேர் ரால்ஃப் டார்லிங், சார்லசு இசுடீவர்ட் எனும் தேடலியலாளரை மாக்குவாரி ஆற்றின் பாதையை கண்டறிந்துவரப் பணித்தார்; அவர் போகன் ஆற்றைக் கண்டறிந்து பின்னர் 1829இல் இந்த ஆற்றைக் கண்டுபிடித்தார். ஆளுநரின் நினைவாக இதற்கு டார்லிங் ஆறு எனப் பெயரிட்டார். 1835இல் மேஜர் தாமசு மிட்ச்செல் டார்லிங் ஆற்றின் முழுமையும் பயணித்தார்.

டார்லிங் ஆற்றில் சீரான நீர்ப்போக்கு இல்லை. இது பெரும்பாலும் வறண்டுள்ளது. சில நேரங்களில் வெள்ளப்பெருக்கெடுக்கிறது. இதன் ஆற்றுப்போக்கில் ஆத்திரேலியாவின் மிக வறண்ட நிலப்பகுதிகள் உள்ளன. 1860களில் டார்லிங் ஆறு மூலமாக மேற்கு நியூ சவுத் வேல்சு மக்கள் கம்பளியை துடுப்பு நீராவிக் கப்பல் மூலம் புர்க்கு, வில்கேனியா இடங்களிலிருந்து தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பியுள்ளனர்.

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "(Australia's) Longest Rivers". Geoscience Australia. 16 October 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-02-16.
  2. Sally Macmillan (24 January 2009). "Darling River townships offer historic route". The Courier-Mail (Queensland Newspapers) இம் மூலத்தில் இருந்து 12 June 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120612033509/http://www.couriermail.com.au/travel/australia/an-historic-route-darling/story-e6freqxf-1111118648230. 
  3. "Challenges facing the Murray–Darling Basin". Murray-Darling Basin Authority. 24 September 2020. பார்க்கப்பட்ட நாள் 8 September 2021.


"https://ta.wikipedia.org/w/index.php?title=டார்லிங்_ஆறு&oldid=4099197" இலிருந்து மீள்விக்கப்பட்டது