டால்ப் சிக்லர்

நிக்கோலஸ் தியோடர் நெமெத் (பிறப்பு: ஜூலை 27, 1980) [1] ஒரு அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரர் மற்றும் மேடை நகைச்சுவையாளர் . இவர் தற்போது உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் உடன் கையெழுத்திட்டு அங்கு இவர் சுமாக்டவுன் நிகழ்ச்சியில் டால்ப் ஜிக்லர் எனும் மேடைப் பெயரினால் அறியப்படுகிறார்.

இவர் கென்ட் மாநில பல்கலைக்கழகத்தில் பயின்றபோது அமெச்சூர் மல்யுத்தத்தில் கலந்து கொண்டு சிறப்பான திறனை வெளிப்படுத்தியுள்ளார். பின் 2004 ஆம் ஆண்டில் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து ஓஹியோ பள்ளத்தாக்கு மல்யுத்தத்திற்கு அனுப்பப்பட்டார், அங்கு இவர் தனது உண்மையான பெயரில் மல்யுத்தம் செய்தார். 2005 ஆம் ஆண்டில் இவர் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் ரா பிரிவு நிகழ்ச்சியில் தேர்வானார்.இவர் சனவரி 2006 இல் ராவில் அறிமுகமானார், நவம்பரில் ஓஹியோவிற்குத் திரும்புவதற்கு முன்பாக ஒரு முறை உலக டேக் டீம் வாகையாளர் பட்டத்தினை வென்றார். செப்டம்பர் 2007 இல், நெமெத் புளோரிடா வாகையாளர் பட்டத்தினை மல்யுத்தத்தில் போட்டியிட்டார். அங்கு இவர் பிராட் ஆலன் மற்றும் பின்னர் கவின் ஸ்பியர்ஸுடன் ஆகிய இரண்டு பேருடன் இணைந்து இரண்டு முறை புளோரிடா டேக் டீம் வாகையாளர் பட்டத்தினை வென்றார்.

செப்டம்பர் 2008 இல் பிரதான பட்டியலில் திரும்பியதும்,தனது பெயரான நெமெத் என்பதனை டால்ப் ஜிக்லராக மாற்றிக்கொண்டார். அப்போதிருந்து, இவர் உலக மிகுகன வாகையாளர் பட்டத்தினை இரண்டு முறையும், இன்டர் கான்டினென்டல் வாகையாளர் பட்டத்தினை ஆறு முறை, யுனைடெட் ஸ்டேட்ஸ் வாகையாளர் பட்டத்தினை இரண்டு முறை மற்றும் ரா டேக் டீம் வாகையாளர் பட்டத்தினை ஒரு முறையும் இவர் வென்றுள்ளார். இவர் இரண்டு முறை சர்வைவர் சீரிஸ் எலிமினேஷன் போட்டிகளிலும் அத்துடன் 2012 ஆம் ஆண்டின்மணி இன் தெ பேங்க் வெற்றியாளராகவும் இருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

நிக்கோலஸ் தியோடர் நெமெத் ,ஜூலை 27, 1980 இல் ஓஹியோவின் கிளீவ்லேண்டில் பிறந்தார். இவர் ரிச்ஃபீல்ட் கொலிஜியத்தில் நடந்த மல்யுத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது இவருக்கு வயது ஐந்து . அந்த வயதிலிருந்தே தொழில்முறை மல்யுத்தத்தின் ரசிகராக இருந்து வருகிறார், மேலும் இவர் 12 வயதில் தொழில்முறை மல்யுத்த வீரராக மாற முடிவு செய்தார். பின்னர் இவர் கோல்ட் கபனாவின் ஆர்ட் ஆஃப் மல்யுத்த பாட்காஸ்டில் தனது உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்திற்காக தனது பெயரை "டால்ப்" என்று தேர்ந்தெடுத்தார், ஏனெனில் அது அவருடைய தாத்தாவின் பெயர், மற்றும் அவரது நண்பர் "ஜிக்லர்" என்ற குடும்பப்பெயரை பரிந்துரைத்தார். இவர் ஓஹியோவின் லக்வூட்டில் உள்ள செயின்ட் எட்வர்ட் உயர்நிலைப் பள்ளியில் படித்தார், அங்கு இவர் ஒரு அமெச்சூர் மல்யுத்த வீரராக இருந்தார்,[1] செயின்ட் எட்வர்டில், இவர் கிரே மேனார்ட் மற்றும் ஆண்டி ஹ்ரோவாட் ஆகியோருடன் அணித் தோழர்களாக இருந்தார் .[2]

செயின்ட் எட்வர்டில் இவர் இருந்த காலத்தில், மல்யுத்த அணி இரண்டு முறை தேசிய வாகையாளர் பட்டத்தினை வென்றது. இவர் கென்ட் மாநில பல்கலைக்கழகத்தில் ஒரு கல்லூரி மல்யுத்த வீரராக இருந்தார், இறுதியில் கெண்ட மாநில அணியின் வரலாற்றில் அதிக முறை மல்யுத்தப் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்ற வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.[1] அவரது சாதனை 2006 ஆம் ஆண்டில் முறியடிக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு நிலவரப்படி, கென்ட் மாநில தொழில் முறை வெற்றிகளில் இவர் இரண்டாவது இடத்தில் உள்ளார். 2000 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் இவர் 121 போட்டிகளில் வெற்றிகளைப் பெற்றார்.[3] இவர் மூன்று முறை 2000முதல் 2003 ஆம் ஆண்டுகள் வரை நடைபெற்ற ஆல்-மிட்-அமெரிக்கன் மாநாட்டு சாம்பியனாக வெற்றிபெற்றார்.

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 Milner, John M. (December 19, 2006). "Nick Nemeth". Slam! Sports. Canadian Online Explorer. பார்க்கப்பட்ட நாள் January 7, 2012.
  2. "St. Ed's Wrestling State Placers" (PDF). St. Edward High School. Archived from the original (PDF) on October 7, 2011. பார்க்கப்பட்ட நாள் December 26, 2011.
  3. Walsh, David (October 7, 2008). "Dolph Ziggler among WWE superstars scheduled for Sunday show". The Herald-Dispatch. பார்க்கப்பட்ட நாள் January 6, 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டால்ப்_சிக்லர்&oldid=2866579" இலிருந்து மீள்விக்கப்பட்டது