டா-ரொன்ஸ் அலென்

அமெரிக்க நடிகை

டா-ரொன்ஸ் அலென் (பிறப்பு பிப்ரவரி 2, 1960 லாஸ் ஏன்ஜல்ஸ், கலிபோர்னியா) ஒரு அமெரிக்க நடிகையாவார். அலென் 1970களில் தனது விடலைப் பருவத்தில் நடித்த தொலைக்காட்சி தொடர்களுக்காக முக்கியமாக அறியப்படுகின்றார். சி.பி.எஸ். தொலைக்காட்சியின் குட் டைம்ஸ் என்ற சிட்கொம் தொலைக்காட்சி தொடரின் பல அங்கங்களில் இவர் மைக்கல் ஈவானின் காதலியான யுவொன்னி (Yvonne) எனும் பாத்திரத்தில் நடித்தார்.

டா-ரொன்ஸ் அலென்
பிறப்புபெப்ரவரி 2, 1960 (1960-02-02) (அகவை 64)
லாஸ் ஏன்ஜல்ஸ், கலிபோர்னியா, ஐ.அ.
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1970கள் - தற்போது
சமயம்கிறித்தவம்
பெற்றோர்ரேமன்ட் அலன் & பாப்ரா அலன்

அலென் தற்போது கலிபோர்னியாவின் லான்காஸ்டர் நகரில் வசித்து வருகின்றார்.1970 களில் என்.பீ.சீ. தொலைக்காட்சியில் ஒளிஒலிபரப்பான நகைச்சுவைத் தொடரான சன்போர்ட் அன் சண் இல் வரும் அங்கில் வீட்ரோ (Uncle Woodrow) என்றப் பாத்திரத்தை நடித்த ரேமன்ட் அலனின் புதல்வியே இவராவார். 1972 ஆம் ஆண்டு வெளியான ஹிக்கி & பொக்ஸ் என்ற குடும்பத் திரைப்படத்தில் பில் கொஸ்பி, றொபர்ட் கல்ப் ஆகிய நடிகர்களுடன் அலனும் நடித்தார்.

குறிப்புகள்

தொகு

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டா-ரொன்ஸ்_அலென்&oldid=3791674" இலிருந்து மீள்விக்கப்பட்டது