இந்தியப் பாதுகாப்புத்துறை உலோகவியல் ஆய்வுக்கூடம்

(டிபென்ஸ் மெடல்லர்ஜிகல் ரிசேர்ச் அமைப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்தியப் பாதுகாப்புத்துறை உலோகவியல் ஆய்வுக்கூடம் (டிபென்ஸ் மெடல்லர்ஜிகல் ரிசேர்ச் லாபரேடரி, Defence Metallurgical Research Laboratory) என்பது இந்திய நடுவண் அரசின் கீழ் அமைந்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (டி. ஆர். டீ. ஓ) ஒரு அங்கமாகும்.[1] டி. ஆர். டீ. ஓ இந்தியாவில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஹைதராபாத் தலைநகரில் காச்சிகுடா என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு முதன்மை ஆராய்ச்சி வளாகமாகும். இந்தியாவின் பாதுகாப்பைக் கருதி இந்த அமைப்பு பல விதமான புத்தியல் தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து, அவற்றை மேம்படுத்தி, இந்தியாவின் பாதுகாப்பிற்குத் தேவைப்படும் உலோகங்களையும், மூலப்பொருள்களையும், கருவிகளையும் இந்த அமைப்பு தயாரித்து வழங்குகிறது.[2]

இவ்வாய்வுக்கூடம் 1963 ஆம் ஆண்டில் ஹைதராபாதில் இந்த வளாகத்தில் நிறுவப்பட்டது. இந்தியாவின் பாதுகாப்பைக் கருதி உருவாக்கிய இந்த அமைப்பில் பொறியியல் துறை சார்ந்த பல அலகுகள் செயல்படுகின்றன. உலோகவியல் சார்ந்த ஆராய்ச்சிகளில் இந்த அமைப்பின் டிபென்ஸ் மெடல்லர்ஜிகல் ரிசேர்ச் ஆய்வுக்கூடம் செயல்படுகிறது. பல ஆண்டுகளாக மிகவும் நவீனமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, பல புதுமைகளை சாதித்துள்ளது. இவற்றில் தூள் உலோகவியல், தூள் உலோகவியல் சார்ந்த உலோகங்களையும், கலப்பு உலோகங்களையும் உருவாக்கி அவற்றை தேவைக்கு ஏற்ற வடிவத்தில் புனைதல்; மேற்காப்பு கவசங்கள், எறிகணைக்கருவிகள் ஆகியவற்றைத் தயாரித்தல், விண்வெளியில் செலுத்தும் கலன்களுக்கான இலேசான கலப்புலோகங்களை தயாரித்தல், காந்தப் பொருட்களைத் தயாரித்தல் ஆகிய பல செயல்முறைகள் அடங்கும். இவை அனைத்திற்கும் பயன் படும் வகையில் வேறு பற்பல நிறுவனங்களும் இங்கே அமைக்கப் பெற்றுள்ளன, அவற்றில் சில மிச்ற தாது நிகம் (Mishra Dhatu Nigam Ltd), கன கலப்புலோகப்போருட்கள் தயாரிக்கும் ஆலை (Heavy Alloy Penetrator Plant), கூட்டமைவுகள் தயாரிப்பு மையங்கள் (Composites Production Centre), இரும்பல்லாத உலோகங்கள் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் (Non-Ferrous Technology Development Centre), மேம்பட்ட ஆராய்ச்சி அனைத்துலக நிலையம் (Advanced Research Centre International), ஆகியவையும் செயல் படுகின்றன. அதி நவீனமான தொழில் நுட்பத்துடன் கூடிய வருங்காலப் பொருட்களையும் (futuristic)உருவாக்கி வருகிறது. அவற்றில் சில:[3]

  • மீ மிகு வலிமை கொண்ட இரும்பு வகைகள் (Ultra-High-strength steel), ஏவுகணைகளுக்குப் பயன்படுபவை.
  • கனமான கலப்புலோகங்கள் கொண்ட துகள்கள், பிருத்துவி சோதனைக்கு உட்பட்டது. எதிரிகளின் விண்வெளிக் கருவிகளுக்கு எதிராக செயல்படுவது.
  • ஒஎப்ஈ காப்பர் (OFE copper) என வழங்கிய கவசவாகனங்களுக்கு எதிராகப் பயன் படும் வழிப்படு ஏவுகணைகள்
  • விண்வெளிப் பயணங்களுக்குத் தேவைப்படும் வகையிலான சிறப்பு காந்தப் பொருட்கள் ஆகியவை

மேற்கோள்கள்

தொகு

<references>

  1. Defence Research Complex, Kanchanbagh, Hyderabad, GlobalSecurity.org
  2. "DMRL transfers technologies to Trade"
  3. ^ "NTPC, DMRL to develop gas turbine blades"