டியூக்கோலியான்
கிரேக்கத் தொன்மவியலின் படி, டியூக்கோலியான் (Deucalion (/djuːˈkeɪliən/; கிரேக்கம்: Δευκαλίων) என்பவர் பிரோமிதியசின் மகன்; பழங்கால ஆதாரங்கள் இவரது தாயை கிளைமீன், ஹெஸியோன் அல்லது பிரோனோயா என்று குறிப்பிடுகின்றன. [1] [2] இவர் கிரேக்க தொன்மவியலில் ஊழிவெள்ளப் பெருங்கதையுடன் நெருங்கிய தொடர்புடையவர்.
குடும்பம்
தொகுடியூகாலியனுக்கும் பைராவுக்கும் குறைந்தது இரண்டு குழந்தைகளாக ஹெல்லன் மற்றும் பிரோடோஜீனியா, [3] மற்றும் மூன்றாவது, ஆம்ஃபிக்டியோன் [4] (பிற மரபுகளில் இவர் தொல் குடிமகன் )
இவரின் குழந்தைகள் குறித்து பழமையான நூல்களில் ஒன்றான கேட்டலாக் ஆப் உமன் என்ற நூலில் பண்டோரா மற்றும் தியா மற்றும் குறைந்தபட்சம் ஒரு மகனான ஹெல்லன் ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர். [5] அவர்களின் சந்ததியினர் தெசலியில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
ஒரு தரவானது டியூகாலியனின் மூன்று மகன்களையும் அவர்களது மனைவியையும் ஓரெஸ்தியஸ், மராத்தோனியோஸ் பிரோனஸ் (ஹெல்லனின் தந்தை) என்று குறிப்பிடுகிறது. [6] [7] சில தரவுகளில், டியூக்கோலியானுக்கு மற்றொரு பிள்ளையாக மெலாந்தோ இருந்தார்.
குறிப்புகள்
தொகு- ↑ The scholia to Odyssey 10.2 names Clymene as the commonly identified mother, along with Hesione (citing Acusilaus, FGrH 2 F 34) and possibly Pronoia.
- ↑ A scholium to Odyssey 10.2 (=Catalogue fr. 4) reports that Hesiod called Deucalion's mother "Pryneie" or "Prynoe", corrupt forms which Dindorf believed to conceal Pronoea's name. The emendation is considered to have "undeniable merit" by A. Casanova (1979) La famiglia di Pandora: analisi filologica dei miti di Pandora e Prometeo nella tradizione esiodea. Florence, p. 145.
- ↑ Pherecydes fr. 3F23
- ↑ Apollodorus, Bibliotheca 1.7.2
- ↑ Hes. Catalogue fragments 2, 5 and 7; cf. M.L. West (1985) The Hesiodic Catalogue of Women. Oxford, pp. 50–2, who posits that a third daughter, Protogeneia, who was named at (e.g.) Pausanias, 5.1.3, was also present in the Catalogue.
- ↑ Hecateus, fr. 1F13
- ↑ Gantz, Timothy (1993). Early Greek Myth: A Guide to Literary and Ancient Sources. London: Johns Hopkins University Press. pp. 167. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8018-4410-X.