ஊழிவெள்ளம்

ஊழிவெள்ளம் என்பது, புராணங்களில் உலகில் தீமைகள் பெருகும்போது மனிதனை அழித்து நீதி நிலைநாட்ட கடவுள் அல்லது கடவுள்களால் ஏவப்பட்ட பெரு வெள்ளப்பெருக்காகும். விவிலியத்தில் கூறப்பட்டுள்ள நோவாவின் பேழை மற்றும் இந்து சமயத்தில் கூறப்படும் மச்ச அவதாரம் என்பன பிரசித்தமான ஊழி வெள்ள புராணங்களாகும். உலகில் இருந்த இருக்கிற கலாச்சாரங்களில் பெரும்பான்மையானவற்றில் "பெரு வெள்ளம்" ஒன்றைப் பற்றிய கதைகள் காணப்படுகிறது.

ஊழிவெள்ளம் ஆக்கம்:Gustave Doré

பல கலாச்சாரங்களுக்குக் குறுக்கே ஊழிவெள்ளம்

தொகு

ஆதி அண்மை கிழக்கு நாடுகள்

தொகு

சுமேரியர்

தொகு

சுமேரியரின் வரலற்றின் படி, சார்ரூபாக் (இன்றைய தெற்கு ஈராக்கு)என்ற நகரிலிருந்து அரசாண்ட சியுசூத்ரா அரசன், என்கிற கடவுளால் மனித குலத்தை அழிக்க வரவிருக்கும் ஒரு பெரிய வெள்ளப் பெருக்கைப் பற்றி எச்சரிக்கப்பட்டார், என்கி ஒரு பெரிய கப்பலைச் செய்யக் கட்டளையிட்டார். அதன் பின்னரான வரலாற்றுப் பதிவு காணமல் போய்விட்டது. வெள்ளத்துக்குப் பிறகு, சியுசூத்ரா, ஆகாய கடவுளுக்கும் என்லில்(தலைமை கடவுள்) கடவுளுக்கும் பலியிட்டார். சுமேரிய அரசர்களின் வம்ச வரலாறும் ஊழிவெள்ளம் பற்றிக் குறிப்பிடுகிறது.

தெற்கு ஈராக்கில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆய்வுகளின் மூலம் சார்ரூபாக் பிரதேசத்தில் கி.மு. 2,750 அளவில் ஏற்பட்ட வெள்ளம் பற்றிய அதாரங்கள் கிடைத்துள்ளன.

இப்பூராணமானது, கி.மு. 17 நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும், எத்ரூ ஆதியாகமத்தின் ஒரு பிரதியில் காணப்படுகிறது.[1]

பபிலோனியா (கில்காமேசு வரலாறு)

தொகு
 
"ஊழிவெள்ள பலகை" (11வது பலகை),அக்காத் மொழியிலுள்ள கில்காமேசு வரலாறு

பாபிலோனிய வரலாறுகளில் ஒன்றான கில்காமேசு வரலாற்றில் கில்காமேசு (Gilgamesh) என்பவர் நிலைவாழ்வை பெறுவதற்காக "உட்னபிசிதிம்" (Utnapishtim) என்ற கடவுளை வழிபடும் போது கடவுள் உலகை ஒரு வெள்ளம்ம் மூலமாக அழிக்க போவதாக அறிவித்து அதிலிருந்து அவரும் அவரது குடும்பமும்,அவரது மந்தைகளும் தப்புவதற்காகப் பெரிய கப்பல் ஒன்றைச் செய்யச் சொன்னார். வெள்ளத்தின் பின்னர் கடவுள் கில்காமேசுக்கு நிலையான வாழ்வைக் கொடுத்தார்.[2]

அக்காத் (அத்ரசிசு வரலாறு)

தொகு

பபிலோனிய அத்ரசிசு வரலாறு (Atrahasis Epic) மனிதரின் சனத்தொகை மிக அதிகரித்தமையே ஊழிவெள்ளத்துக்கு காரணமாக கூறுகின்றது. இது கி.மு. 1700 இல் எழுதப்பட்டதாகும். மனிதன் படைக்கப்பட்டு 1200 வருடங்கள் சென்றப்பிறகு என்லில்(Enlil) கடவுள் அதிக மனித சனத்தொகையால் ஏற்படும் சத்தங்கள் காரணமாக தமது நித்திர களைவதால் இதற்கு தீர்வு காணும் பொருட்டு தேவர் சபையிடம் உதவி கேட்டார். அவர்கள் முதலில் வாதைகளையும், வறட்சியையும், பஞ்சத்தையும் ,உவர்நிலத்தையும் புவி மீது ஏவி சனத்தொகையை குறைக்க எத்தனித்தனர். இவை பலனற்று போகவே, தேவர்கள் ஊழிவெள்ளமொன்றை அனுப்ப முடிவு செய்தனர். இத்தீர்வை ஏற்காத என்கி (Enki)என்ற தேவன் அத்ரசிசுவிவை வெள்ளம் பற்றி எச்சரிக்கிறார். அவர் கப்பலொன்றை செய்வதற்கான அளவீடுகளையும் கொடுத்தார்.

மீண்டும் தேவர் இப்படியான ஊழி வெள்ளத்தை அனுப்பி உலகை அளிக்காதபடி, உலக சனத்தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில் என்கி தேவன் விவாகமாகத பெண்கள், மலடிகள், சிசுமரணம், கருக்கலைவு போன்றவற்றை உணடாகினார்.[3]

எபிரேயர் (ஆதியாகமம்)

தொகு

மேலதிக தகவல்களை காண நோவாவின் பேழை கட்டுரையை பார்க்க

ஆதியாகமம் ஆதியாகமத்தில் கூறப்பட்டுள்ளதன் படி, ஏதேன் தோட்டத்தைவிட்டு மனிட்தன் வெளியேற்றப்பட்டு சில தலைமுறைகள் கடந்த பின்பு மனிதன் பாவ வழிகளில் வீழ்ந்து கடவுளை விட்டு தூரப்போனாகள். கடவுள் உலகை அழிக்க எண்ணி வெள்ளமொன்றை அனுப்ப எண்ணினார். நோவா நீதிமானாக இருந்தபடியால் அவரையும் அவர் குடும்பத்தையும் வெள்ளத்திலிருந்து காப்பாற்ற முடிவு செய்தார்.கடவுள் பேழையொன்றை செய்யச்சொல்லி அதற்கான அளவீடுகளையும் கொடுத்தார். பின்பு அவர் குடும்பத்தையும், மேலதிகமாக தூய விலங்கள் மற்றும் பறவைகளில் ஆண் பெண்னாக 7 சோடிகளையும் தீட்டான விலங்குகளில் ஆண் பெண்ணாக ஒரு சோடியையும் பேழையுள் சேர்க்கச் சொன்னார். மேலும் விலங்குகளுக்கும் நோவாவின் குடும்பத்தாருக்கும் தேவையான உணவையும் பேழயுள் சேர்கச் சொன்னார். நோவாவின் 600வது அகவையில், உலகம் படைக்கப்பட்டு 1656 ஆவது ஆண்டில் கடவுள் வெள்ளத்தை அனுப்பினார்.

இதன் படி வெள்ளம் பின்வரும் வழிகளில் வந்தது:

  1. 40 நாள் தொடர்ந்து மழை மற்றும் "வானத்தி மதகுகள்" திறந்தது
  2. பூமியின் ஊற்றுகள் திறக்கப்பட்டது

ஆதியாகம்ம முதல் அதிகாரத்தை கொண்டு ஆய்வாளகள் வெள்ளதுக்கு முன்னர் பெரிய அளவு நீர் வானத்தில் நீர்காணப்பட்டதாக ஊகிக்கின்றனர்."பின்பு தேவன் நீரின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது நீரிலிருந்து நீரைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்".[4] வெள்ள நீர் 150 நாள் உலகை மூடி காணப்பட்டது.

கப்பல் அரராத் மலையில் தரைதட்டியது. நோவாவின் 601 அகவை முதல் மாதம் முதல் நாளில் வெள்ளம் முற்றாக வற்றிப் போயிருந்தது. இரண்டாவது மாதம் 27 ஆம் நாள் தரை காய்ந்து காணப்பட்டது. கடவுள் நோவாவைப் பேழையை விட்டு வெளியேறச் சொன்னார்.

பின்பு நோவா கடவுளுக்கு தகன பலியொன்றை கொடுத்தார். மேலும் இனி உலகை நீரால் அழிக்க மாட்டேன் எனக் கடவுள் நோவாவுடன் உடன்படிக்கை செய்தார். பின்பு கடவுள் விலங்குகள் மீது மனிதனுக்கு அதிகாரத்தைக் கொடுத்து அவற்றை உண்பதற்கு அதிகாரத்தைக் கொடுத்தார். தனது உடன்படிக்கையின் அடையாளமாக வானவில்லை முகிலின் மீது வைத்தார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "மெசபத்தேமியா வெள்ள பூராணங்கள் பற்றிய மேலோட்டம்". Archived from the original on 2008-05-10. பார்க்கப்பட்ட நாள் 2006-08-08.
  2. கில்காமேசு வரலாறு 11வது பலகை[தொடர்பிழந்த இணைப்பு]
  3. அத்ரசிசு வரலாறு, அத்ரசிசு வரலாறு 2
  4. ஆதியாகமம் 1:6
  5. ஆதியாகமம் 6:, ஆதியாகமம் 7:, ஆதியாகமம் 8:, ஆதியாகமம் 9:
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊழிவெள்ளம்&oldid=3545493" இலிருந்து மீள்விக்கப்பட்டது