டிராகன் (விண்கலம்)

டிராகன் (Dragon) ஸ்பேஸ் எக்ஸால் தயாரிக்கப்பட்ட வின்கலம் ஆகும். இது ஃபால்கன் 9 ஏவுகலத்தால் வின்வெளியில் ஏவப்படுகிறது.

ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம்
டிராகன் அனைத்துலக விண்வெளி நிலையத்த்ருகில் வருகிறது.
விளக்கம்
பணிகுறைந்த புவி சுற்றுவட்டப் பாதையில் சரக்கையும் மனிதர்களையும் எடுத்துச் செல்லுதல்)[1]
ISS resupply (governmental use)
குழுஒருவரும் இல்லை (சரக்கு வகை)
7 (Dragon V2 variant)
ஏவுகலம்ஃபால்கன்
(Dragon C1Dragon C4)[2]
முதல் பறத்தல்8 டிசம்பர் 2010
22 May 2012 (launch of first cargo delivery flight to the ISS)

வரலாறு

தொகு

நாசா-ஐஎஸ்எஸ் விநியோக ஒப்பந்தம்

தொகு

2005ல் நாசாவிண்ணோடத்தின் காலத்திற்குப் பின் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை அனுப்ப தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. மார்ச் 2006ல் ஸ்பேஸ் எக்ஸ் நாசாவிற்கு தந்த திட்டங்களில் டிராகனும் ஒன்று.

2006 ஆகத்தில் நாசா ஸ்பேஸ் எக்ஸையும் கிச்ட்லெர் ஏரொஸ்பேஸ் என்ற இன்னொரு நிறுவனத்தையும் அனைத்துலக_விண்வெளி_நிலையத்திற்கு சரக்கு அனுப்புவதற்கு தேர்ந்தெடுத்ததாக அறிவித்தது.[3]

23 டிசம்பர் 2008ல் நாசா 1.6 பில்லியன் டாலருக்கு ஸ்பேஸ் எக்ஸிற்கு ஒப்பந்தம் அளித்தது. இந்த ஒப்பந்தத்தின் படி அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு பன்னிரெண்டு முறை சென்று வருவதற்கும் ஒவ்வொரு முறையும் 20,000 கிலோ சரக்கும் எடுத்து செல்ல வேண்டும்.

சோதனை பணிகள்

தொகு

நாசா ஸ்பேஸ் எக்ஸிற்கு இரண்டு சோதனை பணிகளுக்கு ஒப்பந்தம் தந்தது. முதல் பணி டிசம்பர் 2010லும் இரண்டாவது பணி மே 2012லும் நடந்தது.[4]

செயல்பட்டு பணிகள்

தொகு

டிராகனின் முதல் பறப்பாடு அக்டோபர் 8ல் ஆரம்பித்து 28ஆம் தேதி முடிந்தது[5]. இரண்டாவது பணி 2013 மார்ச்சிலும் மூன்றாவது பணி 2014 ஏப்ரலிலும் நடந்தது.

அமைப்பு

தொகு

ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் இரண்டு அமப்புகளில் உபயோகப்படுத்தப்படுகின்றது: டிராகன் கார்கோ மற்றும் டிராகன் லேப். இவை இரண்டும் ஆளில்லா பணிகளுக்கு பயன்படுகின்றன.

டிரக்க்கோ உந்து இயந்திரங்கள்

தொகு

வின்வெளிக்கு அனுப்பும்பொழுதும் திரும்பி வரும்பொழுதும் தேவையான உந்து சக்தியை தருவதற்கு பன்னிரெண்டிலிருந்து பதினெட்டு கிரக்கோ உன்துயந்திரங்கள் உபயொகிக்கப்படுகின்றன. இந்த இயந்திரங்கள் நைட்ரசன் டெட்ராக்சைடையும் மோனோமீத்தைல் ஹைட்ரசினையும் எரிபொருளாக பயன்படுத்துகின்றன. ஒவ்வொரு டிராக்கோ இயந்திரத்தால் சுமார் 400 நியூட்டன்கள் உந்துசக்தியைத் தரமுடியும். இந்த இயன்திரன்களால் டிராகனை வட்டப்பாதையில் செலுத்துவதற்கும் உயரத்தைக் கட்டுப்படுத்துவற்கும் முடியும். இரண்டு இயந்திரங்கள் செயலிழந்தாலும் பணிக்கு ஒன்றும் ஆகாது.

சூப்பர் டிராக்கோ

தொகு

டிராக்கோவைவிட மிகவும் சக்திவாய்ந்த இந்த இயந்திரங்கள். செலுத்தியபின் நிறுத்த பயன்படும். அதிக ஆற்றல் கொடுத்தாலும் குறந்த னேரத்திற்கே (ஐந்து விநாடிகள்) கொடுக்கக்கோடிய இந்த இயந்திரத்தை இறங்கும் நேரததில் உபயோகப்படும்.

வெப்பக் கவசம்

தொகு

1600 செல்சியஸ் வெப்பம் வரை தாங்கக்கோடும் வெப்பக் கவசம் நாசாவின் வெப்பக் கவசத்தின் அடிப்படையில் செய்தது. இன்த வெப்பக்கவசத்தை பலமுறை சேதமில்லாமல் உபயோகிக்க முடியும். இன்தக் கவசத்தை அதிவேகமாக பூமிக்குத் திரும்பும்பொழுதும் உபயொகிக்கமுடியும்

வெப்பக்கட்டுப்பாடு

தொகு

டிராகனில் இரண்டு திரவகுளிர்கவிக்கும் அமைப்புகள் வட்டப்பாஅதையில் செல்லும் பொழுது வெப்பத்தைக் கட்டுபாட்டில் வைக்க உதவுகின்றன.

தொடர்பு

தொகு

டிராகனில் செயற்கைக்கோள் மூலமாக தொடர்புகொள்ளத் தேவையான கருவிகள் உள்ளன. பூமியிலிருந்தோ மற்ற செயற்கைக்கோள்களிலிருந்தோ டிராகனை தொடர்பு கொள்ள முடியும்.

மின்னாற்றல்

தொகு

டிராகனில் பொருத்த்ப்பட்டிருக்கும் இரண்டு சூரிய பலகைகளால் வின்வெளிக்குச் சென்றபின் மின் சக்தி தயாரிக்கப்படுகின்றது. இந்த பலகைகளால் சராசரியாக ஆயிரத்து ஐநூறு முதல் இரண்டாயிரம் வாட்களும் அதிகபட்சமாக நான்காயிரம் வாட்களும் மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. நான்கு லித்தியம் பாலிமர் மின்கலங்கள் சூரியனை விட்டு தூரத்தில் இருக்கும்பொழுது டிராகனிற்கு மின்சக்தி தருகின்றன.

மின்னணுவியல்

தொகு

டிராகனில் உள்ள கணிப்பொறிகள் அதன் கட்டுபாடு மற்றும் வழிசெலுத்தலைப் பற்றி பல அம்சங்களை தருகின்றன. வின்கல கட்டுபாட்டு அமைப்பு இரண்டு கனிப்பொறிகளால் ஆனவை.[6]

பாரசூட்டுகள்

தொகு

இரண்டு சிறிய பாரசூட்டுகள் டிராகனை நிலைபடுத்தியபின் மூன்று பெரிய பாரசூட்டுகள் மெதுவாக தரையைத் தொடும்படி செய்கின்றன. டிராகனால் ஒரு சிறிய பாரசூட்டுகள் மெதுவாக தரையைத் தொடும்படி செய்கின்றன. இராகனால் ஒரு சிறிய பாரசூட்டையும் ஒரு பெரிய பாரசூட்டையும் மட்டுமே வைத்து கோட இந்த பணியை செய்ய முடியும்.[7]

டிராகனில் அழுத்தப்பட்ட பெட்டிக்குள் சுமார் 245 கன அடி இடமும் வெளியில் 490 கன அடி இடமும் உள்ளன. இந்த வின்கலத்தால் சுமார் 3310 கிலோ எடையை வின்வெளிக்கு எடுத்து செல்ல முடியும்.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. வார்ப்புரு:Cite press
  2. Clark, Stephen (18 May 2012). "Q&A with SpaceX founder and chief designer Elon Musk". SpaceFlightNow. பார்க்கப்பட்ட நாள் 29 June 2012.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-12-18. பார்க்கப்பட்ட நாள் 2011-12-18.
  4. http://www.bbc.co.uk/news/science-environment-11948329
  5. http://www.bbc.com/news/science-environment-20118963
  6. [1]
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-03-19. பார்க்கப்பட்ட நாள் 2014-11-27.
  8. http://www.space.com/12033-spacex-dragon-space-capsule-infographic.html

வெளி இனைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிராகன்_(விண்கலம்)&oldid=3575335" இலிருந்து மீள்விக்கப்பட்டது