டிரேவியன்
டிரேவியன் (Travian) எனப்படுவது இணைய உலாவியில் பல பயனர்கள் விளையாடும் ஒரு கணினி விளையாட்டாகும். சேர்மனியைச் சேர்ந்த ட்ரேவியன் கேம்ஸ் எனும் நிறுவனம் இந்த விளையாட்டை உருவாக்கியது[1]. கணனி விளையாட்டின் பின்புலம் பண்டைய உரோம நாகரீகத்தைச் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஆரம்பகாலத்தில் நகர்பேசிகளில் விளையாடுவதற்கான ஆதரவு இந்தக் கணனி விளையாட்டிற்கு இருந்தாலும் பிற்காலத்தில் ஜாவா சார்ந்த இந்த நகர்பேசி மென்பெருள் தயாரிப்பு கைவிடப்பட்டது. ஆயினும் தொடர்ந்தும் உலாவி சார்ந்த விளையாட்டு பி.எச்.பி எனும் இணையத்தள வடிவமைப்பு மொழி மூலம் தொடர்ந்து விரிவாக்கப்படுகின்றது.
விளையாட்டு அமைப்பு
தொகுவிளையாட்டில் ஆரம்பத்தில் ஒவரு பயனரும் உரோமம், கோல் அல்லது டியோட்டன் கிராமம் ஒன்றிற்குத் தலைவராக நியமிக்கப்படுவார். கிராமத்தின் வளர்ச்சிக்காக பயனர் தொடர்ந்து செயற்படவேண்டும். புதிய கட்டடங்கள், களிமண், கோதுமை, இரும்பு போன்றவற்றை உற்பத்தி செய்கின்ற செயலமைப்பையும் இந்த விளையாட்டு வழங்குகின்றது. தயாரித்த வளங்கள் மூலம் புதிய கட்டடங்களை அமைத்துக் கொள்ளலாம்.
ஒவொரு இனத்தவரும் வெவ்வேறு வகையான படை அமைப்புகளைக் கொண்டிருந்தாலும் விளையாட்டில் எல்லா இனத்தவரும் ஒரே மாதிராயான கட்டட அமைப்பைப் பயன்படுத்துகின்றனர்.
இதைவிட விளையாட்டில் சில பயனர்கள் சேர்ந்து கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்தக் கூட்டமைப்பின் மூலம் எதிரிப் பயனர்களின் கிராமங்களைத் தாக்கி அழித்தல் அல்லது உள்வரும் தாக்குதல்களை முறியடிக்க முடிகின்றது.
பதிப்புகள்
தொகு
|
|
தானியங்கிகள்
தொகுஇந்த விளையாட்டில் தானியங்கிகள் மூலம் பயனர்கள் தங்கள் விளையாட்டு சார்ந்த செயற்பாடுகளைச் செய்யக்கூடியதாக இருந்தாலும் டிரேவியன் கேம்ஸ் இந்த நடவடிக்கையை தவிர்க்குமாறு வேண்டுகின்றது. தானியங்கிகளைப் பயன்படுத்தும் பயனர்கள் மீத ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படுகின்றது. டிரேவியன் தளத்தில் தானியங்கிகள் (bots) விளையாட்டில் சட்டபூர்வமற்றது எனக் கூறுகின்றது.[4]
உசாத்துணை
தொகு- ↑ ட்ரேவியன் கேம்ஸ்
- ↑ "Statistiken – Travian.org" (in German). Travian Games GmbH. Archived from the original on 2020-12-27. பார்க்கப்பட்ட நாள் 2009-02-12.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-02-16. பார்க்கப்பட்ட நாள் 2011-04-23.
- ↑ காண்க bots