டிரைகைன் மெத்தனோசல்பானேட்
டிரைகைன் மெத்தனோசல்பானேட் (Tricaine methanesulfonate) என்பது ஒரு வெள்ளைநிற மாவு போன்ற வேதியாகும். இது மீன்களுக்கு உணர்வறு (anaesthetic), அமைதியூட்டு (sedative) மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மனிதர்கள் உண்ணப் பயன்படும் வாலுள்ள மீன்களுக்கு அமெரிக்காவால் அங்கிகரிக்கப்பட்ட ஒரே உணர்வறு மருந்தாகும்[1].
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
Ethyl 3-aminobenzoate methanesulfonic acid (எதைல் 3-அமினோபென்சோயேட் மெத்தேன்சல்போனாயிக் ஆசிட்) | |
மருத்துவத் தரவு | |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 886-86-2 |
ATCvet code | QN01AX93 |
பப்கெம் | CID 261501 |
ஒத்தசொல்s | Metacaine (மெட்டாகைன்) Tricaine (டிரைகைன்) MS-222 Finquel (ஃபின்குவெல்) TMS (டிஎம்ச்) |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C10 |
மூலக்கூற்று நிறை | 261.296 g/mol |
SMILES | eMolecules & PubChem |
இயற்பியல் தரவு | |
உருகு நிலை | 149.5 °C (301 °F) |
இது ஒரு தசை தளர்விப்பானாகவும் கலங்களுக்குள் கடத்திகள் செயல்படுவதைத் தடுக்கிறது. இதைத் தடுப்பதால் மூளைக்கும் பிற உறுப்புகளுக்கும் உணர்வுகள் கடத்தப்படுவது தடுக்கப்படுகிறது. இது பயன்படுத்தும் அளவு மீனின் தன்மை, அளவு, எடையைப் பொருத்து மாறுபடும். ஆயினும், பயன்படுத்தக் கூடிய அளவாக அறிவிக்கப்பட்டது 60-65 ppm (மில்லியனில் ஒருப்பங்கு).
இது நீரில் எளிதில் கரையக்கூடியது ஆயினும் நீரின் புளிமக்காரத் தன்மையை மாற்றக்கூடியது. இது நீரின் புளிமத்தன்மையைக் கூட்டுவதால் இவை மீனுக்கு நச்சாக மாறும் வாய்ப்புள்ளது. ஆகையால் சோடியம் பைகார்பனேட்டு என்னும் செறிவு மாறாத் தாங்கியைப் பயன்படுத்துவதன் மூலம் புளிமக்கார நிலையை 6.5 - 7.5 க்குள் நிறுத்தி மருந்தைப் பயன்படுத்தலாம். இதை கடல்நீரில் பயன்படுத்தும் போது பெரும்பாலான சமயங்களில் இவை தேவைப்படாமல் போகலாம். ஏனெனில், கடல்நீருக்கு இயற்கையாகவே செறிவு மாறாமல் நிலைநிறுத்தும் தன்மையுடையதாய் இருக்கிறது[2].