டிரைசுதலைட்டு

சல்பைடு கனிமம்

டிரைசுதலைட்டு (Drysdallite) என்பது Mo(Se,S)2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரிய வகை கனிமமாகும். மாலிப்டினம் செலீனியம் சல்பைடு கனிமமாக இது வகைப்படுத்தபடுகிறது. அறுகோண அமைப்பில் சிறிய பட்டைக்கூம்புரு படிகங்களாக அல்லது பிளவுபடக்கூடிய பொதிகளாகப் படிகமாகிறது. மோவின் கடினத்தன்மை அளவுகோலில் 1 முதல் 1.5 வரை மதிப்பிலான கடினத்தன்மையும் 6.25 என்ற ஒப்படர்த்தியும் கொண்டு ஓர் ஒளிபுகா உலோக கனிமமாக டிரைசுதலைட்டு திகழ்கிறது. மாலிப்டினைட்டைப் போலவே சரியான பிளவையும் கொண்டதாக உள்ளது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் Dry[1] என்ற குறியீட்டால் டிரைசுதலைட்டு கனிமத்தை அடையாளப்படுத்துகிறது.

டிரைசுதலைட்டு
Drysdallite
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுMoSe1.5S0.5
இனங்காணல்
மோலார் நிறை230.41 கிராம்
படிக அமைப்புஅறுகோணம் ஈரறுகோண இருபட்டகம்
பிளப்புசரிபிளவு
விகுவுத் தன்மைமெழுகு, நெகிழ்வான, பொடியாக்குவது கடினம்
மோவின் அளவுகோல் வலிமை2
மிளிர்வுஉலோகத்தன்மை
கீற்றுவண்ணம்பழுப்பும் கருப்பும்
ஒப்படர்த்தி6.248 (கணம்மிடப்பட்டது.)
அடர்த்தி6.248 கி/செ.மீ3 (கணக்கிடப்பட்டது)
பலதிசை வண்ணப்படிகமைவலிமையானது, வெண்மை முதல் வெளிர் சாம்பல், இளஞ்சிவப்பு சாம்பல் வரை

முதன்முதலில் 1973 ஆம் ஆண்டில் சாம்பியாவின் சோல்வேசிக்கு அருகில் ஓர் ஆக்சிசனேற்றப்பட்ட யுரேனியப் படிவுகளில் டிரைசுதலைட்டு காணப்பட்டது. சாம்பியன் புவியியல் ஆய்வு இயக்குனரான ஆலன் ராய் டிரைசுதால் நினைவாகக் கனிமத்திற்கு இப்பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரைசுதலைட்டு&oldid=4086145" இலிருந்து மீள்விக்கப்பட்டது