டிரையசீன்
டிரையசீன் (Triazine) என்பது C3H3N3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் நைட்ரசனை கொண்டுள்ள ஒரு வகையான பல்லினவளையங்களாகும். மூன்று மாற்றியங்களாக டிரையசீன் காணப்படுகிறது. 1,3,5-டிரையசீன்கள் பொதுவாகக் காணப்படுகின்றன.
கட்டமைப்பு
தொகுபென்சீன் போன்ற மூன்று கார்பன் அணுக்கள் நைட்ரசன் அணுக்களால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட சமதள ஆறு உறுப்பு வளைய கட்டமைப்புடன் டிரையசீனும் காணப்படுகிறது. நைட்ரசன் அணுக்கள் இடம்பெற்றிருக்கும் நிலையைப் பொறுத்து மாற்றியங்கள் உருவாகின்றன. அவை 1,2,3-டிரையசீன், 1,2,4-டிரையசீன், 1,2,5-டிரையசீன் என்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன. பிரிடின்கள், டையசீன்கள், டிரையசோல்கள், டெட்ராசீன்கள் போன்றவை மற்ற அரோமாட்டிக் நைட்ரசன் பல்லினவளையங்களாகும். ஒரு நைட்ரசன் அணுவுடன் கூடிய வளையத்தைப் பெற்றிருக்கும் சேர்மங்கள் பிரிடின்கள் என்றும், இரண்டு நைட்ரசன் அணுக்களுடன் கூடிய வளையத்தைப் பெற்றிருக்கும் சேர்மங்கள் டையசின்கள் என்றும், நான்கு நைட்ரசன் அணுக்களுடன் கூடிய வளையத்தைப் பெற்றிருக்கும் சேர்மங்கள் டெட்ரசின்கள் என்றும் ஐந்து உறுப்பு வளையத்தில் மூன்று நைட்ரசன் அணுக்களைப் பெற்றிருக்கும் சேர்மங்கள் டிரையசோல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
பயன்கள்
தொகுமெலாமின்
தொகுமெலாமின் நன்கறியப்பட்ட ஒரு டிரையசீன் ஆகும். 2,4,6-டிரையமினோ-1,3,5-டிரையசீன் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. மூன்று அமினோ பதிலிகள் மெலாமினில் பதிலீடு செய்யப்பட்டுள்ளன. வர்த்தகமுறை பிசின்களுக்கு மெலாமின் ஒரு முன்னோடிச் சேர்மமாகும். அமினோ பதிலி ஒன்று ஒரு கரிமக் குழுவால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டுள்ளதை தவிர குவானமின்கள் மெலானினுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவையாக உள்ளன. மெலாமின் பிசின்களில் குறுக்குப் பிணைப்பு அடர்த்தியை மாற்றியமைப்பதில் குவானமின்களின் வேறுபாடு பயன்படுகிறது. பென்சோகுவானமீன், அசிட்டோகுவானமீன் போன்றவை சில முக்கியமான குவானமீன்களாகும் [1]
.
சயனுரிக் குளோரைடு
தொகு2,4,6-டிரைகுளோரோ-1,3,5-டிரையசீன் எனப்படும் சயனுரிக் குளொரைடு மற்றொரு முக்கியமான டிரையசீன் ஆகும். குளோரின்-பதிலீடு டிரையசீன்கள் இங்கு வினைத்திற சாயங்களின் பகுதிக்கூறுகளாகும்[2]. இச்சேர்மங்கள் குளோரின் குழு வழியாக செல்லுலோசு இழையிலுள்ள ஐதராக்சில் குழுக்களுடன் உட்கருகவர் பதிலீட்டு வினையில் ஈடுபடுகின்றன. மற்ற டிரையசீன் நிலைகளில் குரோமோபோர்கள் உள்ளன. பெரும்பாலும் டிரையசீன்கள் பல்வேறு களைக்கொல்லிகள் தயாரிப்பதற்கான அடிப்படையாகின்றன.
பிற பயன்கள்
தொகுஎண்ணெய் மற்றும் எரிவாயு, பெட்ரோலியம் சுத்திகரிப்பு தொழிற்சாலைகளில் சல்பைடு நீக்கும் முகவராக இவை பயன்படுகின்றன.
தயாரிப்பு
தொகுதனிச்சிறப்பு தயாரிப்பு முறைகள் இருந்தாலும் நைட்ரைல் மற்றும் சயனைடு சேர்மங்களை முப்படியாக்கல் வினைக்கு உட்படுத்தி 1,3,5-மாற்றியன்கள் தயாரிக்கப்படுகின்றன.
1,2,3- மற்றும் 1,2,4-டிரையசீன்கள் தயாரிப்புக்கென்று தனியான தயாரிப்பு முறைகள் உள்ளன. 2-அசிடோசைக்ளோபுரோப்பீன்களை வெப்ப மறுசீராக்கல் முறையில் டிரையசீன் சேர்மங்களைத் தயாரிக்க முடியும். 1,2-டைகார்பனைல் சேர்மங்களை அமிட்ரசோன்களுடன் சேர்த்து ஒடுக்கம் செய்து 1,2,4-மாற்றியனை தயாரிக்க இயலும். பாரம்பரிய இம்முறை பாம்பெர்கர் மூவசீன் தொகுப்புவினை என்றழைக்கப்படுகிறது.
வினைகள்
தொகுடிரையசீன்கள் அரோமாட்டிக் சேர்மங்களாக இருந்தபோதிலும் இவற்றின் மூலக்கூறுகளுக்கிடையிலான ஆற்றல் வேறுபாடு பென்சீனைக் காட்டிலும் மிகக் குறைவாகும். மின்னணு அரோமாட்டிக் பதிலீட்டு வினை இங்கு கடினமாகும். ஆனால் குறிப்பிட்ட குளோரினேற்ற பென்சீன்களில் அணுக்கரு அரோமாட்டிக் பதிலீட்டு வினை எளிதாக நிகழ்கின்றன. 2,4,6-டிரைகுளோரோ-1,3,5-டிரையசீன் தண்ணீருடன் சேர்த்து சூடாக்கினால் எளிதாக சயனுரிக் அமிலமாக நீராற்பகுப்பு அடைகிறது. டிரைகுளோரைடை பீனாலுடன் சேர்த்து சூடாக்கும் போது 2,4,6-டிரிசு(பீனாக்சி)-1,3,5-டிரையசீன் உருவாகிறது. அமீன்களுடன் சேர்க்கப்படும்போது ஒன்று அல்லது பல குளோரைடுகள் இடப்பெயர்ச்சி அடைகின்றன. பிற குளோரைடுகள் செயல்திறன் மிக்கவையாக வினையில் ஈடுபடுகின்றன. இந்த அடிப்படையே செயல்திற சாயத் தொழிலில் பயனாகிறது. கார்பாக்சிலிக் அமிலங்களை அமைடேற்றம் செய்ய சயனுரிக் குளோரைடு உதவுகிறது[3] 1,2,4-டிரையசீன்கள் எலக்ட்ரான் மிகு டையீனோபில்களுடன் தலைகீழ் எலக்ட்ரான் நாட்ட டையீல்சு ஆல்டர் வினையில் பங்குபெறுகின்றன. ஒரு மூலக்கூறு நைட்ரசனை வெளியே தள்ளி ஓர் அரோமாட்டிக் வளையமாகி இரு வளைய இடைநிலையாக மாறுகின்றன. இவ்வழிமுறையில் அ,2,4-டிரையசீன்கள் ஆல்க்கைன்களுடன் வினைபுரிந்து பிரிடின் வளையங்களைத் தோற்றுவிக்கின்றன. இதற்கு மாற்றாக நார்போர்னாடையீனை பயன்படுத்தியும் ஆல்கைனை பயன்படுத்தலாம்.[4] நிலையான வளர்ச்சி பயன்பாடுகளுக்கான புதிய செயல்பாட்டுப் பொருட்கள் வடிவமைப்பில் டிரையசீன்கள் முக்கியமான சின்தோன்களாகக் கருதப்படுகின்றன என 2007 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது [5][6].
ஈந்தணைவிகள்
தொகுபிசு-டிரையசினைல் பைபிரிடின்கள் எனப்படும் 1,2,4-டிரையசீன் வழிப்பொருட்களின் ஒரு தொடர் மேம்பட்ட அணுக்கரு செயல்முறைகளில் பயன்படுத்த திட்டமிடப்பட்டது.[7][8][9] பிசு-டிரையசினைல் பைபிரிடின்கள் என்பவை பிரிடின் வளையம் இரண்டு 1,2,4-டிரையசீன்-3-யைல் குழுக்களுடன் பிணைந்த மூலக்கூறுகளாகும். மூன்று ஈரணு அரீன் ருத்தேனியம் அல்லது ஒசுமியம் சேர்மங்களை பிணைத்து ஒருங்கிணைவுக் கூடுகள் உருவாக்குவதில் டிரையசீன் அடிப்படையிலான ஈந்தணைவிகள் பயன்படுத்தப்படுகின்றன. [10]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Amino Resins". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. (2012). Wiley-VCH. DOI:10.1002/14356007.a02_115.pub2.
- ↑ Horst Tappe, Walter Helmling, Peter Mischke, Karl Rebsamen, Uwe Reiher, Werner Russ, Ludwig Schläfer and Petra Vermehren "Reactive Dyes"in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2000, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a22_651
- ↑ Triazine-Promoted Amidation of Various Carboxylic Acids Jeremy Schlarb 1999 Article பரணிடப்பட்டது 2005-03-19 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Shi, B.; Lewis, W.; Campbell, I. B.; Moody, C. J. Org. Lett., 2009, 3686-3688 எஆசு:10.1021/ol901502u
- ↑ https://worldwide.espacenet.com/publicationDetails/biblio;jsessionid=XU+H4ZRvzVIvNFl9IQOmRhmA.espacenet_levelx_prod_0?FT=D&date=20101104&DB=EPODOC&locale=fr_EP&CC=US&NR=2010280216A1&KC=A1&ND=4
- ↑ http://cordis.europa.eu/result/rcn/179610_en.html
- ↑ Geist, Andreas; Michael Weigl; Udo Müllich; Klaus Gompper (2000). "ACTINIDE(III)/LANTHANIDE(III) PARTITIONING USING n-Pr-BTP AS EXTRACTANT: EXTRACTION KINETICS AND EXTRACTION TEST IN A HOLLOW FIBER MODULE". 6th Information Exchange Meeting on Actinide and Fission Product Partitioning and Transmutation: 641-647. http://www.oecd-nea.org/pt/docs/iem/madrid00/Proceedings/Paper14.pdf. பார்த்த நாள்: 30 April 2013.
- ↑ Hill, C.; D. Guillaneux; X. Hérès; N. Boubals; L. Ramain. SANEX-BTP PROCESS DEVELOPMENT STUDIES இம் மூலத்தில் இருந்து 15 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121115151847/http://www-atalante2004.cea.fr/home/liblocal/docs/atalante2000/P3-26.pdf. பார்த்த நாள்: 30 April 2013.
- ↑ "Development Of Electrochemical Separations Of Uranium And Re Elements From Fluoride Melts" (PDF). Archived from the original (PDF) on 2009-09-29. பார்க்கப்பட்ட நாள் 2019-08-25.
- ↑ Hudson, Michael J.; Michael G. B. Drew; Mark R. StJ. Foreman; Clément Hill; Nathalie Huet; Charles Madic; Tristan G. A. Youngs (2003). "The coordination chemistry of 1,2,4-triazinyl bipyridines with lanthanide(III) elements – implications for the partitioning of americium(III)". Dalton Transactions (9): 1675-1685. doi:10.1039/B301178J. http://pubs.rsc.org/en/Content/ArticleLanding/2003/DT/b301178j. பார்த்த நாள்: 30 April 2013.