டிஸ்மாலேண்ட்

டிஸ்மாலேண்ட் (Dismaland) என்பது பேங்க்சி என்னும் ஒரு ஓவியக் கலைஞரால் உருவாக்கப்பட்ட கண்காட்சி ஆகும். இது இங்கிலாந்தின் சோமர்செட் என்னும் ஊரில் இரண்டரை ஏக்கர் நிலத்தில் 58 கலைஞர்களின் கைவண்ணத்தில் அமைக்கப்பட்டது[1] . இங்கு உள்ள காட்சிகள் அனைத்தும் கிண்டலும் பகடியுமாக சிந்திக்க வைக்கும் நோக்கில் அமைக்கப்பட்டன. இந்தக் கண்காட்சி தொடங்கும் வரை உள்ளூர் மக்கள் எவருக்கும் தெரியாமல் பேங்க்சி கமுக்கமாக வேலை செய்து முடித்தார்[1][2].

டிஸ்மாலேண்ட்
அமைவிடம்மேற்கு-சூப்பர்-மேர், சோமர்செட், இங்கிலாந்து
ஆள்கூறுகள்51°20′27″N 2°58′58″W / 51.3409°N 2.9828°W / 51.3409; -2.9828
கருப்பொருள்கலைக் கண்காட்சி
பொதுமேலாளர்பேங்க்சி
இணையத்தளம்www.dismaland.co.uk
நிலைதற்காலிகக் கண்காட்சி: ஆகஸ்ட் 21 - செப்டம்பர் 27, 2015
டிஸ்மாலேண்ட்

ஊடகப் பசிக்குப் பலியான டயானாவை நினைவூட்டும் வகையில் 'சிண்ரெல்லாவின் மரணம்' என்ற பேரி டேல் சிலை, கள்ளத்தோணிகளை நினைவுப் படுத்தும் தண்ணீர் போட் சிற்பங்கள், மிக்கி மவுஸ் காது அணிந்த பெண், குழந்தைகளின் பாக்கட் செலவுக்கு 5 பவுன் வழங்கப்பட்டு ஒரு மாதத்திற்குள் 50 பவுன் திருப்பிச் செலுத்த வேண்டும் என்னும் அறிவிப்பு என பல்வேறு கிண்டல் கேலி செய்யும் காட்சிகள் உள்ளன. இக்காலத்தில் நிகழும் நுகர்வுக் கலாச்சாரம், அதிகாரம், பொருளியல் சூழ்நிலை, ஊடக வன்முறை, எந்திரக் கதியில் செல்லும் வாழ்க்கை முறை ஆகியவற்றை நயம் பட இடித்துரைக்கிறது இக்கண்காட்சி.

மேற்கோள்

தொகு
  1. 1.0 1.1 Morris, Steven (18 ஆகத்து 2015). "Banksy fans flock to Weston-super-Mare after Dismaland show rumours". தி கார்டியன். பார்க்கப்பட்ட நாள் 18 ஆகத்து 2015.
  2. "Banksy Dismaland show revealed at Weston's Tropicana – BBC News". BBC News. பார்க்கப்பட்ட நாள் 20 ஆகத்து 2015.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிஸ்மாலேண்ட்&oldid=3315955" இலிருந்து மீள்விக்கப்பட்டது