டி.எசுபேசு
டி.எசுபேசு அல்லது எண்ணிம வெளி என்பது ஒரு கட்டற்ற எண்ணிம சொத்துக்களை மேலாண்மை செய்ய பயன்படும் ஒரு மென்பொருள் ஆகும். அடிப்படையில் இது ஒரு பல்லூடக ஆவணங்கள் மேலாண்மை மென்பொருள் ஆகும். நூல்கள், ஆய்வறிக்கைகள், படங்கள், நிகழ்படங்கள், தரவுக் கணங்கள் என பலதரப்பட்ட உள்டக்கத்தை பாதுகாத்து, பகுத்து, பகிர இந்த மென்பொருள் உதவுகிறது.
டி.எசுபேசு கட்டமைப்பு
தொகுநிறுவுதல்
தொகுடி.எசுபேசை யுனிக்சு/லினக்சு இயங்குதளங்களில் அல்லது விண்டோசு இயங்குதளங்களில் நிறுவிக் கொள்ளலாம். ஒப்பீட்டளவில் டி.எசுபேசை நிறுவுதல் சற்றுக் கடினமான செயற்பாடாடும்.
லினக்சில் நிறுவுதல்
தொகுலினக்சில் நிறுவ பின்வரும் மென்பொருட்கள் தேவை:
- யாவா விருத்திப் கருவிப்பெட்டி
- அப்பாச்சி டாம்கேட்
- அப்பாச்சி மாவன் (Apache Maven)
- அப்பாச்சி ஆன்ட்
- போசுகிரசு அல்லது ஆரக்கிள் தரவுத்தளம்
விரிவான தகவல்களுக்கு டி.எசுபேசு வலைத்தள ஆவணங்களைப் பார்க்கவும்.